Skip to main content

மக்களவையில் மரபை மீறாத காங்கிரஸ்!

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர் கட்சி அந்தஸ்த்து பெரும் வாய்ப்பை இழந்தது.பாஜகவும் எந்த கட்சிக்கும் எதிர் கட்சி அந்தஸ்த்தை வழங்கவில்லை. இந்த நிலையில்  புதிய சபாநாயகரை தேர்ந்தெடுத்த பின்னர், அவரை பிரதமருடன் இணைந்துஅழைத்துச் சென்று அமர வைக்கும் நிகழ்வில் காங்கிரஸ் தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை.
TAG2 ---------------------------


 

 

congress

இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸில் இருந்து அதிர் ரஞ்சன் சௌத்திரி மற்றும் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலும் பிரதமருடன் சேர்ந்து சென்று புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தார். அதிக உறுப்பினர்களைக்கொண்ட எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இல்லாத போதிலும், அவர்கள் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு உரிய மரியாதை வழங்கிய இந்த செயல், வழக்கத்தில் இருந்து வரும் மரபை மீறாத செயலாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்