Skip to main content

மோடிக்கு 84, ராகுலுக்கு 8; ரபேல் முதல் ராமர் கோவில் வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட டைம்ஸ்...

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

இந்தியாவின் முக்கியமான செய்தி நிறுவனத்தில் ஒன்றான டைம்ஸ் குழுமம் வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு ஆன்லைன் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

hgjghjghj

 

இதில் அடுத்த பிரதமராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு, 83.89 சதவீதம் பேர் மோடிக்கும், 8.33 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும், 1.44 சதவீதம் பேர் மம்தா பானர்ஜிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர்.

மேலும் பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் சிறுபான்மையின மக்கள் அச்ச உணர்வுடன் உள்ளனரா என்ற கேள்விக்கு 65 சதவீத பேர் இல்லை எனவும், ஆம் என்று 25 சதவீதம் பெரும் பதிலளித்துள்ளார்.

அதுபோல ரபேல் விவகாரம் எதிர்வரும் தேர்தலில் பிரதமர் மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, பின்னடைவை ஏற்படுத்தாது என்று 75 சதவீத மக்களும், பின்னடைவை ஏற்படுத்தும் என்று 17.5 சதவீத மக்களும் கூறியுள்ளனர்.  

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவு எது என்ற கேள்விக்கு, ராமர் கோவில் காட்டாதது தான் என 35.7 சதவீத மக்களும், வேலையில்லா திண்டாட்டம் என 29.5 சதவீத மக்களும் பதிலளித்துள்ளார்.

மோடி அரசின் மிகப்பெரிய சாதனை எது என்ற கேள்விக்கு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது என 34 சதவீத மக்களும், ஜி.எஸ்.டி என 29 சதவீத மக்களும் பதிலளித்துள்ளார்.

டைம்ஸ் குழுமத்தின் இந்த கருத்துக்கணிப்பை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி டைம்ஸ் குழுமத்தின் இந்த முடிவுகள் ஒருதலைப்பட்சமானவை என விமர்சித்து வருகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்