Skip to main content

ரூ.2,700 கோடி பாரத் மண்டபத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! 

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Rs. 2,700 crore, rain water stagnation like a pond in the bharat g20 summit

 

இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோன்று பிரகதி மைதானத்தின் முன்பு தமிழகத்தின் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது. நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலகத் தலைவர்கள் ஒப்புதல் அளித்ததுள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 

 

இந்த நிலையில் இன்று ஜி 20 உச்சி மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஒப்படைத்தார். கடந்த ஓராண்டாக ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றுள்ளது. இன்றுடன் ஜி-20 மாநாடு நிறைவுபெற்றது.

 

Rs. 2,700 crore, rain water stagnation like a pond in the bharat g20 summit

 

இந்த நிலையில் பல்லாயிரம் கோடி செலவு செய்யப்பட்டு தயார் செய்யப்பட்ட பாரத் மண்டபத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜி-20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தை உருவாக்க சுமார் ரூ.2.700 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்ததில் மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியிருந்தது. இந்த வீடியோவை காங்கிரஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்