வணிக நோக்கத்துடன் உணவுப் பொருட்களில் கலப்படங்கள் மற்றும் சுகாதார சீர்கேடு காரணமாக பழைய கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது தொடர்பான வீடியோக்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ஆய்வுகள் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர். இந்நிலையில் திறந்தவெளியில் சாலையோர உணவு கடை ஊழியர் ஒருவர் பாத்திரங்களை அங்கு தேங்கி இருக்கும் சாக்கடை நீரில் கழுவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையோரங்களில் இருக்கும் கடைகளில் மலிவு விலையில் உணவுகள் கிடைக்கும் என்பதால் சாமானிய மக்களின் பசியை தீர்க்கும் இடத்தில் முக்கியமாக அங்கம் வகிக்கிறது சாலையோர கடைகள். சில நேரங்களில் ஆடம்பர மனிதர்கள் கூட சாலையோர கடைகளில் சாப்பிடுவதை பார்க்க முடியும். ஆனால் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகும்போது இதுபோன்ற சாதாரண கடைகளில் சாப்பிடலாமா வேண்டாமா என்று எண்ணவே தோன்றும்.