Skip to main content

”கலைஞர் கூறியதுபோல் ராவணன் திராவிடன் அல்ல ஆரியன்”- சுப்பிரமணியன் சுவாமி...

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
subbu


பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 'இந்திய பாரம்பரியக் கலாச்சாரம் மற்றும் அதன் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
 

அப்போது, ''ராவணன் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிஷ்ரக் கிராமத்தில் பிறந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கூறிவந்தது போல் ராவணன் ஒரு திராவிடன் அல்ல ஆரியன்'' என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். ராவணன் இலங்கையில் பிறந்தவர் என்பதை முற்றிலுமாக மறுத்தார் சுப்பிரமணியன் சுவாமி.
 

மேலும்,''வட இந்தியாவில் பிறந்ததாலும், ராவணனைக் கொன்றதாலும் தென் இந்தியர்களுக்கு ராமன் வெறுக்கத்தக்கவர் ஆகிவிட்டார். ராவணன் இலங்கையில் இருந்ததால் அவர் திராவிடன் எனக் கருதப்படுவது உண்மை அல்ல. ராவணன் சாம வேதம் அறிந்தவர்” என்று தெரிவித்தார்.
 

''வட இந்தியா ஆரியர்களுக்கானது எனவும், தென் இந்தியர்கள் திராவிடர் என்பதை ஆங்கிலேயர் நம் மனதில் புகுத்தியது தவறான கருத்து. எனவே, நாம் அனைவரும் ஒருவரே என்பது ஏற்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் தம் வரலாற்று நூல்களில் எழுதியது போல் நாம் ஒன்றும் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல'' எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்