Published on 02/02/2021 | Edited on 02/02/2021
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்கு எல்லையிலும் கலவரம் வெடித்தது.
இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில் இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் விவசாயிகள் கூடுவதைத் தடுக்க, எல்லைகளில் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "இந்திய அரசே, பாலங்களை எழுப்புங்கள், சுவர்கள் வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.