Skip to main content

முதலில் அனுஷ்கா... தற்போது கோலி... விருது அளிக்கும் பீட்டா அமைப்பு...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு பீட்டா அமைப்பு சார்பாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

peta names virat kohli as person of the year 2019

 

 

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பாக அறியப்படும் பீட்டா அமைப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல பிரபலங்கள் தூதர்களாகவும், தன்னார்வலர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட பீட்டா அமைப்பு 2019ஆம் ஆண்டின் சிறந்த நபராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளது.

அண்மையில் ராஜஸ்தானின் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் துன்புறுத்துவதைப் பார்த்து, அதனை தடுக்குமாறு வலியுறுத்தியதற்காகவும், விலங்குகளை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக அதனை தத்தெடுக்க வேண்டும் எனவும் ரசிகர்களை வலியுறுத்தியதற்காகவும் விராட் கோலிக்கு இந்த 'சிறந்த மனிதர்' விருதை பீட்டா அமைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அனுஷ்கா சர்மா, நடிகர் மாதவன், ஹேமமாலினி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் நிகழ்ச்சி 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான  ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.