rajasthan government has announced no celebrating the new year celebration

பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவில்லை என்றாலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் டிசம்பர் 31- ஆம் தேதி இரவு 08.00 மணி முதல் ஜனவரி 1- ஆம் தேதி காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும் டிசம்பர் 31- ஆம் தேதி அன்றுஇரவு 07.00 மணிக்கு அனைத்து கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.