குஜராத் மாநிலம், வதோதரா பகுதி டாடா அட்வான்ஸுடு லிமிடெட் (Tata Advanved Complex) வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், இந்திய ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்படவுள்ளது. இந்த வளாகத்தை, பிரதமர் மோடி ஸ்பெயின் பிரதமருடன் இன்று (28-10-24) தொடங்கி வைத்தார்.
இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்படும் சி-295 ரக விமானத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதில், 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. டாடா நிறுவனத்தை தவிர பாரத் எலெக்ட்ரான் லிமிடெட், பாரத் டைனமிக் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிப்பு தர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.