Published on 05/02/2019 | Edited on 05/02/2019

ஒவ்வொருக்கும் தனக்கென ஒரு வாகனத்தை வைத்துக்கொள்ள விரும்புவர். அதிலும் விலையுயர்ந்த வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர் மத்தியில் இருக்கும். அந்த வாகனத்திற்கான பதிவெண்ணை பெறுவதிலும் பலர் கவனமாக இருப்பர். தற்போது அப்படியான ஒரு சம்பவம்தான் நடந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு போர்ஸ் (Porsche) கார் ஒன்றை வாங்கியுள்ளார். மருந்து ஆலை உரிமையாளரான பாலகோபால் என்பவர்தான் 31 இலட்சத்திற்கு KL 01 CK 1 என்ற எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் வாங்கிய வாகனத்திற்கு 19 இலட்சம் கொடுத்து ஃபேன்ஸி நம்பர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.