Skip to main content

ஐடிசி குழுமத் தலைவர் ஓய்.சி .தேவேஸ்வர் காலமானார்!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

பிரபல தொழில் அதிபரும் , ஐடிசி  குழும தலைவருமான  யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நல குறைவால் காலமானார் . இவருக்கு வயது 72 ஆகும். குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ஐடிசி குழுமத்தில் 1968-யில் பணியில் சேர்ந்தார் தேவேஸ்வர்.அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தின் இயக்குனராக பதவியேற்றார்.அதனைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி 1996-ல் ஐடிசி நிறுவனத்தின் புதிய சேர்மனாக பதவியேற்றார்.

 

yc deveshwar

 

 

அதே போல் ஐடிசி நிறுவனம் ஆனது 100 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடைப்போடுகிறது. இதற்கு கடினமாக உழைத்தவர் தேவேஸ்வர். இந்தியாவில் உள்ள முன்னணி கம்பெனிகளில் ஒன்றாக ஐடிசி நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான புகையிலை பொருட்கள் தாண்டி உணவு பொருட்களில் ஐடிசி நிறுவனம்  நுழைய காரணமாக இருந்தவர் தேவேஸ்வர் ஆவர். இவரின் இந்த நிர்வாக திறமையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண்  விருது வழங்கியது. மேலும் ஐடிசி நிறுவனத்தை எப்எம்சிஜி நிறுவனமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐடிசி நிறுவனத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் கடந்த வாரம் காலமானதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஐடிசி நிர்வாக குழு கூட்டம் கூடியது. இதில் தற்போது ஐடிசி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பை வகிக்கும் சஞ்ஜீவ் பூரி ஐடிசி நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஐடி மாணவரான சஞ்ஜீவ் பூரி, வார்டன் வர்த்தக கல்வி மையத்தில் மேலாண்மை படிப்பு முடித்தவர். 1986- ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சஞ்ஜீவ் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தார். அதே போல் 2015 ஆம் ஆண்டு ஐடிசி இயக்குனர் குழுவிலும், 2017- ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

 

SANJIV

 

ஐடிசி நிறுவனத்தின் இன்ஃபோடெக் தலைவராகவும் , ஐடிசியின் துணை நிறுவனமான சூர்ய நேபாள் நிர்வாக இயக்குனராக சஞ்ஜீவ் பூரி செயல்படுவார் என ஐடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ஐடிசி நிறுவனம் சுமார் ரூபாய் 3481 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. ஆனால் முந்தைய ஆண்டை காட்டிலும் லாபம் 15% அதிகம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஐடிசி நிறுவனம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.