Skip to main content

"எங்களுடன் துணைநிற்பதற்கு நன்றி"!- இஸ்ரோ ட்வீட்.

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான்- 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனை தொடந்து சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து "விக்ரம் லேண்டர்" பிரிந்து நிலவின் அருகில் சுற்றி வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டரின் சிக்னல் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.

isro tweet thank you chandrayaan 2 mission support to all peoples

 

இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் "நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என இஸ்ரோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில், எங்களுடன் துணைநிற்பதற்கு நன்றி. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்" என இஸ்ரோ பதிவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்