Skip to main content

"பாஜகவினர் காவி உடைகளை அணிந்துகொண்டு பெண்களுக்கு எதிராக.." - ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகம் எழுந்து வருகிறது. இதன் காரணமாக அண்மையில் தெலுங்கானாவில் துப்பாக்கிச்சூடு வரை சென்றது. அதில் அரசியல் தலைவர்கள் வரை தொடர்பில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளானார்.



இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தற்போது அதிரடியாக பேசியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறியதாவது, " நாட்டில் பெண்கள் பலர் தீக்குளிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியான பாஜக தலைவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால், அவர்கள் காவி ஆடைகளை அணிந்துகொண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அத்தகையவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா" என கேள்வி எழுப்பியுள்ளார். ஜார்கண்டில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இவரின் இந்த பேச்சு மாநிலத்தில் அனலை கூட்டியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்