Skip to main content

பப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்... தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019


மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சவுராப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது நகை தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா ஒரு வேலைக்காக நகைகளை பாலிஷ் செய்யும் ஆசிட்டை ஒரு பாட்டிலில் வைத்து பையில் எடுத்துவந்துள்ளார்.



இந்நிலையில் ரயில் பயணத்தின்போது செல்ஃபோனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சவுராப்பிற்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது  விளையாடும் ஆர்வத்தில் அவர் தண்ணீர் என நினைத்து சந்தோஷ் சர்மா பையில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மயக்கமடைந்து சரிந்து விழ, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு; பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Acid Incident on 3 female students in karnataka

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீச்சு; விசாரணை வளையத்தில் ஃபிளிப்கார்ட்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

 Acid attack on schoolgirl-Flipkart in probe ring

 

பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி துவாரகாவில் மூன்று பேர் அடங்கிய கும்பல் பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் சச்சின் அரோரா, ஹர்ஷித் அகர்வால், வீரேந்திர சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பிரபல நிறுவனமான ஃபிளிப்கார்ட்  இணையதளத்தில் ஆசிட் வாங்கியது தெரிய வந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.