Skip to main content

வங்கதேசத் தந்தைக்கு விருது! - இந்தியா அறிவிப்பு!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

sheikh mujibur rahman

 

இந்திய அரசு, 1995 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும், 'அமைதிக்கான காந்தி விருதை' அளித்து வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான காந்தி விருது, ஓமன் நாட்டின் மன்னர் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்கள் ஓமன் நாட்டை ஆட்சி செய்த அவர், கடந்தாண்டு காலமானார்.

 

அதேபோல், 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான காந்தி விருது, வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேச நாடு உருவாவதில் முக்கியப் பங்காற்றியவர். வங்கதேசத்தின் தந்தையாகப் போற்றப்படுபவர். மேலும் அவர், வங்கதேசத்தின் முதல் அதிபராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்