9 வயது சிறுவனை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கேட்ட பணத்தை பெற்றோரால் கொடுக்க முடியாததால் அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் அஃப்ரோஷ் என்ற 9 வயது சிறுவன் இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர் ஷாஜஹான்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறுவனை அழைத்து செல்ல அம்புலன்ஸ் ஓட்டுநர் பணம் கேட்டுள்ளார்.
அவரிடம் கொடுக்க பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்த சிறுவனை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டதாக அந்த சிறுவனின் தாயார் கண்ணீருடன் தெரிவித்தார். அனால் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே மிகவும் மோசமான நிலையில் தான் அந்த சிறுவனின் உடல்நிலை இருந்தது. லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், சிறுவனின் பெற்றோர் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகக் கூறிச் சென்றனர். .பின்னர் எங்களை அவர்கள் திரும்பத் தொடர்பு கொள்ளவே இல்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இந்நிலையில் அமரர் ஊர்திக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த தனது மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரே தூக்கி வந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும் உத்தரபிரதேச நீதித்துறையோ அல்லது சுகாதார துறையோ எதுவும் கண்டுகொள்ளாததால் இது இப்படியே தொடர்ந்து வருகிறது என்கின்றனர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.