
கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவப்படங்கள் அடங்கிய் கொடிகள் திருவிழா ஊர்வலத்தில் இடம்பெற்ற விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூரில் குட்டிச்சாத்தான் மடத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலச ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது, 2020இல் பா.ஜ.க நிர்வாகி சூரஜ் கொலை செய்யப்பட்ட வழக்கைல் தண்டனை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகளின் புகைப்படம் அடங்கிய கொடிகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியில் இருந்த சூரஜ், கடந்த 2003ஆம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பின்னர், கடந்த 2020ஆம் ஆண்டு, பா.ஜ.க நிர்வாகி சூரஜ் அவரது வீட்டிற்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது, 2 இறந்துவிட்டனர். ஒரு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.