இந்தியாவின் சர்ச்சைக்குரிய பகுதியான ஜம்முவில் இருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் ரஸானா. கத்துவா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் முகமது யூசுப் பிஜ்வாலா – நசீமா பீவியின் மகள் ஆசிபாபானு. 8 வயதேயான சிறுமி. முஸ்லிம்களில் குஜ்ஜார் என்கிற நாடோடி சாதியை சேர்ந்தவர்கள். அவர்களது இரண்டு மகள்கள் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்துவிட்டதால் தனது அண்ணன் மகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார் முகமதுயூசுப். மான் போல் எப்போதும் துள்ளி குதித்துவிளையாடிக்கொண்டு இருப்பால் ஆசிபாபானு.
கடந்த ஜனவரி 10ந்தேதி குதிரைக்கு தண்ணீர் காட்ட சென்றாள், குதிரைகள் மட்டும் வீடு திரும்பியது ஆசிபா வரவில்லை. அன்று இரவு, மறுநாள் தேடிவிட்டு 12ந்தேதி அவளது குடும்பம் காவல்நிலையத்தில் புகார் தருகிறது, போலிஸ் கண்டுக்கொள்ளவில்லை. ஜனவரி 17ந்தேதி காலை அருகில் உள்ள ரஞ்சனா என்கிற வனத்தில் ஆசிபாபானுவின் உடல் கிடக்கிறது. அவளது இடுப்பு எலும்புகள் உடைப்பட்டும், உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட வடுக்கள், உடலில் பற்குறிகள், நகக்கீறல்கள் இருந்தன. இது அப்பகுதி பழங்குடி மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி போராட்டங்கள் நடைபெற்றதால் இறுதியில் காஷ்மீர் முதல்வர் மெகபூப் தலையிட்டதன் விளைவாக அந்த பகுதியை சேர்ந்த வருவாய்த்துறையில் பணியாற்றி கடந்த அண்டு ஒய்வு பெற்ற அரசு அதிகாரி சஞ்சீராம், காவல்துறை அதிகாரிகள் சுரேந்தர்வர்மா, ஆனந்த் தத்தா, திலக்ராஜ், கஜீரியா, சஞ்சீராம் மகன் விஷால், ராம் மருமகன், விஷால் நண்பன் பர்வேஷ்குமார் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி என்கிற இரண்டு கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டன. அதற்கு காரணம், கைதானவர்கள் அனைவரும் இந்துக்கள். அதோடு, ஹீராநகர் என்கிற அந்த பகுதி மற்றும் அந்த மாவட்டம் 95 சதவிதம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. கொலை செய்யப்பட்ட ஆசிபாவின் குடும்பம் முஸ்லிம். அதோடு, அங்கு அவர் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் இடம் வாங்கி இடுகாடு அமைத்துள்ளார்கள். இந்துக்கள் பகுதியை இஸ்லாமியர்கள் படிப்படியாக ஆக்ரமிக்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தை பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் அப்பகுதியில் பரப்பிவருகின்றன. இதனால் அப்பகுதியில் இஸ்லாமியர்களை கண்டால் இந்துக்கள் பெரும்பாலோனோர் விரோதிகளாகவே பார்த்துவந்தனர். யூசுப்பிஜ்வாலா இடம் வாங்கி இடுகாடு அமைத்ததை விவகாரமாக்கி அப்பகுதியில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற இயக்கங்கள் இந்து மக்களை தூண்டிவிட்டு வந்துள்ளனர். இதில் தான் சஞ்சய் ராம்க்கும் – யூசுப்பிஜ்வாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் யூசுப்பின் 8வயது மகளை கடத்திய ராம், முதலில் தனது குதிரை லாயத்தில் மயக்கமாக்கி வைத்திருந்துள்ளார். பின்னர் கோயில் கருவறை ஒன்றில் வைத்திருந்து அவரை பாலியல் பலாத்காரம் தொடர்ச்சியாக செய்து கொலை செய்துவீசியது தெரியவந்தது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தான் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.
அந்த 8 வயது குழந்தையிடம் என்ன உடல் சுகத்தை இந்த மனித மிருகங்கள் கண்டுயிருக்க முடியும். தங்களது வெறுப்பை அந்த சிறுமியிடம் காட்டுவதை தான் இந்து இயக்கங்கள் கற்று தருகின்றனவா?. பாஜக ஆதரவாளர்கள், நாங்கள் ஆதரவுயில்லை என்பவர்கள் பின் எதற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த வேண்டும்? அதில் பாஜக முக்கிய பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் இவர்களின் கடந்த கால செயல்பாடுகளும் நினைவுக்கு வந்து மோதுகின்றன.
கர்ப்பிணி பெண் கூட்டு பலத்காரம்………
குஜராத் கோத்ரா கலவரத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற 1 மாத கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதில் நடந்த நூற்றுக்கணக்கான சம்பவங்களில் ஒரு சம்பவம், கோத்ரா நகரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதிக்பூர் கிராமத்தில் இந்துத்துவா கும்பல் இஸ்லாமியர்களை தேடித்தேடி அடித்து, உதைத்து, வெட்டியதோடு, குடியிருப்புகளுக்கு தீவைத்தது. தீ வைக்கப்பட்ட வீடுகளில் பில்கிஸ்பானுவின் வீடும் ஒன்று. அவர் தனது குடும்பத்தினரை பார்க்க தனது 3 வயது மகள் சஹானாவோடு 5 மாத கர்ப்பிணியாக புகுந்த வீட்டில் இருந்து வந்துயிருந்தார்.
அதுப்பற்றி நீதிமன்றத்தில் பில்கிஸ்பானு கூறும்போது, அப்போது ரயில் தீ வைக்கப்பட்ட பின்னர் காலை நேரம். நான் சமையலறையில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய அத்தையும், அவருடைய குழந்தைகளும் ஓடி வந்தனர். அவர்களுடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்படுவதாகவும், உடனடியாக இவ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார். உடுத்தியிருந்த துணிகளோடு உடனடியாக கிளம்பினோம். எங்களுடைய செருப்புகளை அணிந்துகொள்ள கூட எங்களுக்கு நேரம்மில்லை. சில நிமிடங்களில், சுற்றுப்புறங்களிலுள்ள எல்லா முஸ்லிம்களின் வீடுகளும் வெறுமையாகிவிட்டன. சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றுவிட்டன.
நான் என்னுடைய மூன்று வயது மகள், தாய், கர்ப்பிணி உறவினர், அவருடைய இளையோர், உடன் பிறந்தவர் மகன்கள் மற்றும் மகள்கள், வயது வந்த ஆண்கள் இருவர் என மொத்தம் 17 பேர் குழுவில் பில்கிஸ் பானு அடைக்கலம் தேடி இந்து மதத்தை சேர்ந்த கிராம கவுன்சில் தலைவரிடம் சென்றோம். முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவரையும் கொலை செய்வதாக அந்த கும்பல் மிரட்டியதால். நாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. அடுத்த சில நாட்கள், இந்த 17 பேர் குழு, மசூதி, அல்லது இந்த மதத்தவரின் இரக்கத்தால் வாழ்வதற்காக வேறொரு கிராமத்துக்கு செல்ல முடிவு செய்து காட்டு வழியாக பயணத்தை தொடங்கினர். இரண்டு ஜீப்புகளில் வந்த குழுவினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். எங்களை வழிமடக்கியவர்கள் சிறு வயதில் அவர் வளருகின்றபோதே ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பார்த்து வளர்ந்த கிரமத்திலுள்ள அண்டைவீட்டுக்காரர்கள்தான்.
அவர்கள் எங்களை வாளாலும், தடியாலும் தாக்கினர். என்னுடைய மடியில் இருந்து எனது மகளை பறித்து கொண்ட ஒருவர், ஒரு கல்லில் நன்றாக மோதும்படியாக தரையில் வீசி எறிந்தார். என்னுடைய ஆடைகளை கிழித்தெறிந்தனர். நான் 5 மாத கர்ப்பிணி எனச்சொல்லி கதறி அழுதேன். அவர்கள் விடவில்லை கூட்டாக என் மேல் பாய்ந்தார்கள். என்னை மட்டும்மல்ல இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றேடுத்த என்னுடைய உறவினர் மகளையும் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்தனர். அவளின் இரண்டு நாள் பச்சிளம் குழந்தையும் கொன்றார்கள்.
மூன்று பேர் என்மேல் பாய்ந்து பிராண்ட நான் சுயநினைவிழந்துவிட்டேன். பின்னர் சுயநினைவுக்கு வந்தபோது, ரத்தம் தோய்ந்த என்னுடைய உடலை உள்ளாடையால் மூடிக்கொண்டு அருகில் பார்த்தபோது 3பேரை தவிர அனைவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள், வாய்விட்டு அழக்கூட உடம்பில் தெம்பில்லை. பயந்துப்போய் பக்கத்திலுள்ள குன்றில் ஏறி, ஒரு குகையில் ஒருநாள் மறைந்து இருந்தேன். அடுத்த நாள், தாகம் எடுத்ததால், கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்க பக்கத்திலுள்ள பழங்குடியின கிராமத்திற்கு சென்றேன். முதலில் என்னை கண்டு சந்தேகமாக பார்த்து அடித்து துரத்த முயன்றனர். பின்னர் சிலர் முன்வந்து என்னுடைய உடலை மூடிக்கொள்ள பிளவுஸ் மற்றும் துப்பட்டா ஒன்றையும் வழங்கினர் என்றார்.
இதுமட்டும்மல்ல கலவரத்தில் ஈடுப்பட்ட கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட், இந்துத்துவா அமைப்பாள பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவர் அவரையும், அவரது நெருங்கிய சகாக்கள், அரசு தலைமை வழக்கறிஞரை தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கி பேசி அதை ரகசிய கேமராக்களில் படமாக்கி உலகத்துக்கு காட்டியது. கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினனரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார்.
குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா, கோத்ரா படுகொலை நிகழ்ந்ததும் ஆத்திரமடைந்த மோடி, முதல்வர் பதவியை மட்டும் வகித்திராவிட்டால் அகமதாபாத்தின் முஸ்லீம் குடியிருப்புப் பகுதியான ஜூஹாபூராவில் போய் வெடிகுண்டும் வீசியிருப்பார் என்றார்.
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.
நரேந்திரமோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாயா கோட்னானி. மகப்பேறு மருத்துவரான இவர் நரோடா பாட்டியாவில் முஸ்லிம் பெண்களில் கர்ப்பிணிகள் யார் என்று அடையாளம் காண்பித்து அவர்களின் வயிற்றை கிழித்து கருவில் இருந்த சிசுவை எடுத்து தீயில் பொசுக்கி படுகொலை செய்ய தூண்டியவர்.
பாஜக நிர்வாகி மதன் சாவல், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களுக்கு தனது வீட்டில் தங்கவைத்து பாதுகாப்பு தந்தார். நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுங்கள் என்றார். நாங்கள் பணத்துக்கு ஆசைப்படுவது போல் நடித்தோம், அவரும் நம்பி கதவை திறந்தார். வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். அவரின் கையை இருவர் பிடித்துக்கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன். பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அ்வரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்றார்.
குஜராத்தில் கோத்ரா கலவரத்தின் தொடர்ச்சியாக அடுத்து வந்த 4 மாதத்தில் மட்டும் வெளியே தெரிந்த தகவலின் கணக்குப்படி 300 முதல் 400 பெண்களை வன்புணச்சி செய்து இந்துத்துவ ஆட்களால் கொல்லப்பட்டுயிருந்தார்கள்.
6 வயது சிறுவன் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறான். கலவரக்காரர்கள் அவனுக்குக் குடிக்க பெட்ரோலைத் தருகின்றனர், வலுக்கட்டாயமாகக் குடிக்க வைக்கின்றனர். பின் அவன் வாயில் ஒரு தீக்குச்சி கொளுத்திப் போடப்படுகிறது. அவன் சின்னாபின்னமாகிறான்.
இப்படி குஜராத்தில் மட்டும்மல்ல, சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் தனது நண்பர்களோடு சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியவர், இதுப்பற்றி நான் புகார் தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உபி முதல்வர் யோகி வீட்டின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார். காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த சிறுமியின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி துன்புறுத்திய எம்.எல்.ஏ. செங்கரின் தம்பி சென்று அடித்து உதைத்துள்ளார். அதனாலயே அவர் இறந்துள்ளார்.
இஸ்லாமிய ஆண்கள் என்றால் கொலை செய், பெண்கள் என்றால் வன்புணர்வு செய்து கெலை செய் என்பதைத்தான் இந்துத்துவா அமைப்புகள் சாஹாக்கள் என்கிற பெயரில் வைத்துள்ள பயிற்சி மையத்தில் தருகிறார்கள். இந்துக்களின் விரோதி இஸ்லாமியர்கள் என்பதும், இஸ்லாமியர்களுக்கு உதவினால் அவன் இந்துவாகவே பார் எனச்சொல்வது தான் இந்த சாஹாக்களின் பணியே. அந்த அடிப்படையில் தான் குஜராத்தில் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இஸ்லாமியர்கள் என கொலை செய்யப்பட்டதும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு வழங்குபவன் இந்துவாக இருந்தால் அவனும் இந்து மத விரோதி என்கிற கண்ணோட்டத்துடனே, காங்கிரஸ் ஜாப்ரி கொலை செய்யப்பட்டார்.
இது பில்கிஸ்பானுவோடுவோ, ஆசிபாபானுவோடுவோ நிற்கப்போவதில்லை. நாளையும் தொடரும். இதை செய்தவர்களையும், செய்ய தூண்டுபவர்களையும், துணைபோகிறவர்களையும் துடைத்தெரிய வேண்டியது சமூகத்தின் கைகளில் தான் உள்ளது.