உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகிறார்கள். ஆனால் இளைஞர்கள் சிலர் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்கதையாகி வருகின்றது. காவலர்கள் அன்பாகச் சொல்லிப்பார்த்தார்கள், அடித்தும் பார்த்தார்கள். ஆனால் இளைஞர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், திருப்பூர் போலிசார் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு நூதன முயற்சியில் இறங்கினார்கள்.
அதன்படி சாலையில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களைச் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்கள். போலிசார் எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று இளைஞர்கள் யோசிப்பதற்குள் சாலை ஓரத்தில் நின்ற ஆப்புலன்ஸின் உள்ளே அவர்களை ஏற்றி உள்ளே ஒரு கரோனா பாதித்தவர் இருக்கிறார், அவர்களுடன் நீங்களும் அமருங்கள், கோவை சென்று உங்களுக்கு கரோனா இருக்கிறதா என்று உங்களைச் சோதனை செய்துவிட்டு வரலாம் என்று கூறி அவர்களை உள்ளே செல்ல சொல்ல, அனைவரும் ஏற மறுத்து அழத் தொடங்கியுள்ளனர். இருந்தாலும் அவர்களை விடாமல் அழுத்தி காவலர்கள் உள்ளே தள்ளினார்கள்.
உள்ளே சென்ற அவர்கள், அங்கு தொற்று வந்தவர் போல படுத்திருந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கதறினார்கள். ஜன்னல் பகுதியில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் குதித்துள்ளனர் அய்யா, நாங்கள் இனிமேல் ஊர் சுற்ற மாட்டோம் என்று கதறிய நிலையில், காவல் துறையினர் அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். காவல்துறையினரின் செட்டப்பாக இந்த நிகழ்வு இருந்தாலும் சொல் பேச்சு கேட்காதவர்களுக்கு இது போல தண்டனைகள் வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகிறார்கள் என்பதே நிஜம்.
இளைஞர்கள் கதறும் வீடியோ இதோ...