Skip to main content

கைவிட்ட உறவு - கைகொடுத்த உழைப்பு! தனியாளாக விவசாயம் செய்யும் பெண்! 

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
Relatives who did not help



கணவனை இழந்த பெண் தன்னுடைய சொந்த உழைப்பால் தனது 3 பிள்ளைகளையும் கரையேற்றி வருகிறார்.


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ருத்திரி. இவர்களுக்கு சிவகங்கை, சிவரஞ்சினி என இரண்டு மகள்களும், அருணாச்சலம் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காலமானார். 
 

ருத்திரியின் உடன்பிறப்புக்களோ, கண்ணனின் உடன்பிறப்புக்களோ, உறவினர்களோ யாரும் ருத்திரிக்கும் அந்த குழந்தைகளுக்கும் உதவ முன்வரவில்லை. வறுமை குடும்பத்தை வாட்டியது. அன்றாட தேவைகளுக்கே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 
 

தனக்கு சொந்தமான நிலத்தில் சின்ன சின்ன விவசாய பயிர்களை பயிரிட்டு அதன் மூலம் வருமானத்தை பார்த்த ருத்திரி, தனது குழந்தைகளை படிக்க வைத்தார். தற்போது தனது சொந்த நிலத்தில் தனது மாடுகளை வைத்து தானே ஏர் உழுது உளுந்து விதைத்து விவசாயம் செய்து வருகிறார். 
 

கணவனை இழந்த ருத்திரி தனி ஒரு ஆளாக விவசாயத்தில் ஈடுபட்டு தனது 3 பிள்ளைகளையும் கரையேற்றி வருகிறார். கைவிட்ட உறவுகள் முன்பு தலைநிமிர்ந்து நின்று காட்டிருக்கிறார் ருத்திரி. 
 


 

 

 

 

சார்ந்த செய்திகள்