Skip to main content

15 நாள் பரோல் கேட்கும் சசிகலா: என்ன சொல்கிறது கர்நாடக சிறை விதிமுறை?

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
sasikala nadarajan


 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் வி.கே.சசிகலா. புதிய பார்வை ஆசியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (20.03.2018) அதிகாலை சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.
 

இந்தநிலையில் கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் கேட்கிறார். எத்தனை நாள் பரோல் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. 
 

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். ஆனால் சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. 6 மாதங்கள் முடிவடைய இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன.
 

அதனால் சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கணவரின் இறுதிசடங்கில் பங்கேற்க  சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதால் சசிகலாவுக்கு பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.