Skip to main content

“உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி வழங்க ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கும் திட்டங்கள் யாவை? - ஆ.ராசா!

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

https://www.facebook.com/share/p/1NoSMo8xuq/

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி (10.03.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் இன்று (01.04.2025) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படிபதினைந்தாவது நிதி ஆணையம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிந்துரைத்துள்ள நிதி விவரங்கள் குறித்து திமுக மக்களவை கொறடாவும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உள்ளூர் சுயாட்சி அமைப்புகளுக்கு (LSGs) வழங்கப்படும் மொத்த நிதி எவ்வளவு?.  ஜி.எஸ்.டி (GST) மற்றும் பிற வரிகள் காரணமாக உள்ளூர் அமைப்புகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி அல்லது மானியங்களை வழங்க ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கும் திட்டங்கள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.

புதுமையான முயற்சிகளை ஊக்குவிக்கும் கூட்டு ஏற்றுமதி மேம்பாட்டிற்கான ஸ்பைஸ் திட்டத்தின் (SPICE SCHEME) மூலம் தர்மபுரி விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் அ. மணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்பைஸ் திட்டத்தால் இதுவரை பயனடைந்த தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) எண்ணிக்கை, பொருட்களின் தரம், உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் ஸ்பைஸ் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி, தொழில்நுட்பம் அல்லது உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களையும் தெரிவிக்குமாறு அவர் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவுடன் நடந்து வரும் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது ஒன்றிய அரசாங்கம் கட்டணங்களைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஒன்றிய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளார். இவ்வாறு கட்டணங்களை குறைப்பதன்மூலம் பல துறைகளில் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், வேலை இழப்புகளுக்கும் வழி வகுக்கும் என சுட்டிக்காட்டிய அவர், இழப்புகளை தடுக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும் உள்ளூர் உற்பத்தித் துறையில் இத்தகைய கட்டணக் குறைப்புகளின் நீண்டகால பாதிப்பு குறித்து இந்தியத் தொழில்துறை பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்தாயிரம் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் எனும் கொள்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அரக்கோணம் திமுக எம். பி, ஜகத்ரட்சகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இத்திட்டத்தின்கீழ் இதுவரை உருவாக்கப்பட்ட அமைப்புகள் எத்தனை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள்,விலை அறிதல், மற்றும் உள்ளீட்டு சேமிப்பு, சந்தை பற்றிய விழிப்புணர்வு, வருமானம் ஆகியவை குறித்து முறையான தகவல்களுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் அறிந்துகொள்ள இந்த அமைப்புகள் உதவியாக இருக்கின்றவா?. சந்தைப் போட்டி, உள்கட்டமைப்பு மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் அடிப்படையில் விவசாய உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?உணவு பதப்படுத்தும் விநியோகச் சங்கிலிகளில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைப்பது மற்றும் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்யவும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவிக்கவும் அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் தனது கேள்வியில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/p/1NoSMo8xuq/

பெண்களிடையே பிரசவத்திற்குப் பிந்தைய மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. அதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற ஒரு பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது குறித்து ஒன்றிய அரசு பெண்கள் நலனில் அக்கறையுடன் ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதா என்றும் பிரச்சினைகளை கண்டறிவதுடன் அவற்றுக்கான தீர்வை வழங்குவதில் துணை செவிலியர்களின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கின்றது எனவும் கேட்டுள்ளார். இப்பிரச்சினையில் தீவிரத்தை கருத்தில்கொண்டு உடனடியாக பெண்களின் பிரசவத்திற்குப் பிந்தைய மனநலத்தை மையமாகக் கருதும் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் அசல் கைத்தறி பொருட்களை பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கோவை மக்களைவை திமுக உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பல கைத்தறிப் பொருட்கள் இயந்திரத்தின் கீழ் நெய்யப்பட்டு நாட்டில் கையால் தயாரித்த பொருட்களாக விற்கப்படுகின்றன என்பதை குறிப்பிட்டு அதை தடுக்க வேண்டும் என்றும் போலி கைத்தறிப் பொருட்களை கண்டறியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்