Skip to main content

மன்னிப்பு கேட்ட ஆக்ஸ்போர்டு!!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018


 

மன்னிப்பு கேட்ட ஆக்ஸ்போர்டு!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் "சர்வேதேச மகளிர் தினம்" அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள கிளாரன்டன் கட்டிட படிகளில் "ஹாப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே" என்று எழுதப்பட்டிருந்து. அதனை அங்கு துப்புரவு பணியில் இருக்கும் பெண் ஒருவர். அதனை தண்ணீர் வைத்து துடைத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

இதனை அந்த பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடு ஆசிரியராக பணிபுரியும் சோபி ஸ்மித்தான் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது போன்ற செயல் பெண்களுக்கு எதிரானது, பெண்கள் தினத்தை அவமதிப்பதாகும் என்றெல்லாம் நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகளிடம் எதிர்ப்புகள் கிளம்ப, இதற்கு  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது டுவிட்டர் பக்கத்தில் "நாங்கள் இதற்கு மிகவும் வருந்துகிறோம், சர்வேதேச மகளிர் தினம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று இனி இதுபோல் நடக்காது" என்று பதிலளித்துள்ளது.