Skip to main content

கூட்டுத் தொழுகை தவிர்த்திடு! ஏழை எளியோருக்கு உதவிடு! - களத்தில் இஸ்லாமிய அமைப்புகள்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு மதத் தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும்போது, சமய தலைவர்கள் உதவியோடு அவர்களின் வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக்கொள்ள, உரிய வசதிகளைச் செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசுத் தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம் என்றும் கூறியிருந்தார்.


வைரஸ் தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருபவர்களிடமும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி வருபவர்களிடமும் நாம் பேசினோம்.

பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியக்  கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர்,  சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மு.முஹம்மது மன்சூர் காஷிபி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...

பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டிருக்கிறது. பள்ளிவாசலில் தொழுகை செய்ய முடியாத இந்த நேரத்தில் நீங்கள் ஆற்றக்கூடிய சமூகப் பணிகள் என்ன?

தொழுகையை வீட்டிலேயே செய்து கொள்கிறோம். இந்த நேரத்தில் அரசுடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மன ஆறுதல் கொடுப்பதற்காக வீடியோ கான்பரஸ் அல்லது ஆன்லைன் மூலமாகவோ அவர்களது மனதை ஆற்றுப்படுத்துகிறோம். தனிமையில் இருப்பவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக நல்ல விஷயங்களை எடுத்து சொல்கிறோம். அடுத்து அவர்களுடைய தேவையை கேட்கிறோம். அந்தத் தேவைகளை உள்ளே இருந்து கொண்டு அவர்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் நாம் வெளியே உள்ள அரசு அதிகாரிகளிடம் சொல்கிறோம்.


அவர்களுக்குச் சுகாதாரப் பற்றாக்குறை இருக்கிறது, ரிப்போர்ட் இன்னும் வரவில்லை, மருந்துகள் என்ன தேவைப்படுகிறது, உணவு சரியாக வரவில்லை, 15 பேர், 20 பேருக்கு ஒரு பாத்ரூம் இருப்பது சரியில்லை, 5 பேருக்கு ஒரு பாத்ரூம் இருப்பது போல் செய்து கொடுங்கள் என்று அவர்கள் சொல்வதை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல்களில் ஈடுபட்டுள்ளோம். 

 

 

cccc


 

http://onelink.to/nknapp



மூன்றாவது எங்களது பள்ளிவாசலை சுற்றியுள்ள அன்றாடம் கூலித் தொழிலுக்குச் சென்று வருபவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாத காரணத்தினால் எங்களது சேமிப்பில் இருந்து அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான்கள் கொடுப்பதுடன், காய்கறிகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கையில் கொஞ்சம் காசும் கொடுக்கிறோம். எங்களால் இயன்ற உதவிகளைக் கடந்த 30-ஆம் தேதி முதல் செய்து வருகிறோம். திடீரென போக்குவரத்து நின்றுவிட்டது. வெளியே செல்ல முடியாத நிலை என்பதால் இதற்கான பணிகளைச் செய்வதற்கான குழுக்களை அமைக்க நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வேறென்ன உதவிகள் செய்கிறீர்கள்? அந்த உதவிகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தானா?

அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம். இதில் எந்த பாகும்பாடும் கிடையாது. ஒட்டுமொத்த மனித குலமும் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுதல். எங்களது கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் வேலை செய்தவற்கு ஒரு குழு அமைத்துள்ளோம். அதில் 50 மருத்துவர்கள், 100 வழக்கறிஞர்கள் உள்பட இருக்கிறார்கள். இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலேயும் 5ல் இருந்து 10 பேர் கொண்டதாக இருக்கும். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், சமூகப் பணி செய்வதற்கும் அவர்களுக்கு அனுமதி உள்ளது என அரசின் சுகாதாரத்துறையிடம் இருந்து நேரடியாக அடையாள அட்டை வாங்கியுள்ளோம்.

தலைமைச் செயலாளர் சண்முகம் இவர்களுக்கு முழுமையான அறிவுரை  சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எங்களுக்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அங்குள்ள உணவுகள் பிடிக்கவில்லை என்றால் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களுக்கான உணவுகளைத் தயார் செய்ய சொல்கிறோம்.தண்ணீர் இல்லை என்றால் தண்ணீர் சப்ளை செய்கிறோம்.சிறப்பு வார்டில் உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.சிறப்பு வார்டில் வசதிகள் குறைவாக உள்ளது என்றால், அவர்கள் தங்கி சிகிச்சைப் பெற எங்களுடைய இடங்களைக் கொடுக்கிறோம். உதாரணமாகத் திருப்பத்தூர் மாவட்டம், உமாராபாத் அரபு கல்லூரி உள்ளது. அதனை முழுமையாகவே கரோனா சிறப்பு வார்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் அங்கு வந்து சிகிக்சை பெறலாம். இஸ்லாமியர்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் வந்து சிகிச்சை பெறலாம். இதேபோல பல இடங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று அரசிடம் சொல்லியிருக்கிறோம்.சிறப்பு வார்டில் உள்ளவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க டாக்டர்களைப் பேச வைக்கிறோம். அரசும் செய்கிறது.இருந்தாலும் அவர்களுடைய மனது ஆறுதல் அடையும் என்பதற்காக நாங்களும் செய்கிறோம். 
 

வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலில்தான் நாங்கள் சிறப்பு தொழுகை செய்வோம் என்று சொல்லி தென்காசி போன்ற இடங்களில் அத்து மீறி நடைபெற்று இருக்கிறதே? இது நியாயம்தானா? 
 

இஸ்லாம் வழிபாடுகளில் சில சலுகைகளை அளித்திருக்கிறது. தொடர் பயணத்தில் இருக்கும் ஒருவர் தொழுகைகளை சுருக்கிக்கொள்ள அனுமதி உண்டு. இதுபோன்ற தொற்று நோய் பேரிடர் நேரங்களில் ஒன்று கூடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. இந்த நேரத்தில் வீடுகளில் இருந்து தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படித்தான் இஸ்லாமிய மார்க்கம் சொல்லியிருக்கிறது.

எங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் அதை வலியுறுத்தியுள்ளோம். அதனை ஏற்றுத்தான் பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸாக்கள் பூட்டப்பட்டிருககின்றன. குடியுரிமை சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. 

இந்த நிலையில் தென்காசியில் நடைபெற்ற சம்பவம் வருந்தத்தக்கது. ஒரு வெள்ளை ஆடையில் கருப்பு புள்ளி விழுந்தது போல ஆகிவிட்டது. அங்கு நடைபெற்றது மாபெரும் தவறு. எங்கேயாவது இப்படி நடந்து விடுவதால் அதனை பெரிதுப்படுத்திவிடக்கூடாது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தும் வரை வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைகளை நடத்தக் கூடாது என்று மீண்டும் அறிவித்திருககிறோம். அரசின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். 

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் அட்வைஸ் செய்திருக்கிறீர்களா?

 

http://onelink.to/nknapp


இதுபோன்ற செயல்கள் கூடாது. உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லி வெள்ளிக்கிழமையே ஒரு அறிக்கையே கொடுத்திருக்கிறோம். 


 

கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதியில் தினந்தோறும் இரண்டு வேளை உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வரும் தொப்புள்கொடி உறவுகள் அமைப்பை நடத்தும் சுமையா நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

chennai



நான்கு பெண்களாகச் சேர்ந்து இந்த நெருக்கடியான நிலையில் இந்தப் பணியை மேற்கொள்வதன் நோக்கம் என்ன?
 

ஊரடங்கு என அறிவித்தவுடன் சௌகார்பேட்டையில் நானும், எனது சகோதரியும் பைக்கில் வந்து கொண்டிருந்தோம். ஒரே கூட்டமாக இருந்தது. அப்போது பைக்கை நிறுத்தி பார்த்தோம். மளிகை கடைகளில் கூட்டம். ஒரு வயதான பெண் அழுது கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன், காசு உள்ளவங்க முன்கூட்டியே பொருளை வாங்கிக் கொள்கிறார்கள். எங்களைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்று என் கையைப் பிடித்து அழுதார்.

 

http://onelink.to/nknapp

 

chennai



இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாலையோரத்தில் வசிப்பவர்கள், தினமும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்துபவர்களுக்கு நிலைமை என்ன ஆகும் என நினைத்தேன். 

 

chennai


நான் மெடிக்கல் கடை வைத்திருக்கிறேன். எனக்கு தெரிந்தவர்களுடன் ஒரு குரூப் அமைத்தேன்.எனது சகோதரிகளிடம் சொன்னேன்.அவர்களும் சரி என்றார்கள். எனக்குத் தெரிந்த தோழி ஒருவர் என நாங்கள் நான்கு பெண்கள் இருக்கிறோம்.எங்களுக்குப் பக்க பலமாக எங்கள் சகோதரர்கள் இருவர் இருக்கிறார்கள்.

 

chennai




நாங்கள் சமைத்து ஓட்டேரி, கோடம்பாக்கம், கோயம்பேடு பகுதியில் சாலையோரத்தில் கஷ்டப்படுபவர்களிடம் கொடுத்து வருகிறோம்.மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளை உணவுகளை மதியமே கொடுத்து விடுவோம். தற்போது தினமும் 150 பேருக்கு நாங்கள் சமைத்து கொடுத்து வருகிறோம். தண்ணீர் கேட்கிறார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. அதற்கும் முயற்சி செய்து வருகிறோம். 


 

chennai



இப்படி கொடுக்கும்போது கோடம்பாக்கத்தில் சில குடும்பங்கள் மளிகை பொருள்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளதை அறிந்தோம்.இதனையடுத்து அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, குழம்பு மிளகாய் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சீரகம், கடுகு, மிளகு, வெந்தயம், பூண்டு, புளி உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் என்று நினைத்தோம்.

 

chennai

 

அதன்படி அவைகளை ஒவ்வொரு இடத்திலும் வாங்கி பேக்கிங் செய்து இதுவரை 250 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்.எங்களுக்கும் சிலர் உதவிகள் செய்கின்றனர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு இரவு நேரத்தில் உணவு தயார் செய்து கொடுக்கவும் உள்ளோம். 
 

முகக் கவசம், கையுறை ஆகியவற்றை போட்டுக்கொண்டு நாங்கள் சமைக்கும்போதும், மளிகை பொருட்கள் அடங்கிய பை பேக்கிங் செய்யும்போதும் மிகவும் பாதுகாப்பாக செய்கிறோம். 

 

chennai




யார் யாரையெல்லாம் பார்த்து  இந்த  உதவியை செய்கிறீர்கள்?
 

வீடற்றவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என எல்லோருக்கும் முடிந்தவரை கொடுக்கிறோம். சாதி, மத வேறுபாடுகளை நாங்கள் பார்க்காமல் கொடுத்துக்கொண்டு வருகிறோம். யாரும் பசியோடு இருக்கக்கூடாது.எங்கள் நபிகள் நாயகமும் இதனைத்தான் சொல்லியிருக்கிறார்.அதனைப் பின்பற்றித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.மக்கள் ரொம்ப தேவையில் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.ஊரடங்கு முடிந்தாலும் அவர்கள் பொருளாதாரத்தில் கஷ்டப்படுவார்கள். நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நாங்கள் உயிரோடு இருக்கும் வரை எங்கள் தொப்புள் கொடி உறவுகளை விடமாட்டோம். எங்கள் பணி மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

 

கோவையில் மஜகவினர் ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் உணவு அளிப்பது மற்றும் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி அடிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் எம்.எச். அப்பாஸ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

 

​    ​​    ​covai


 

கோவையில் நீங்கள் எடுக்கக்கூடிய நல்லிணக்க நடவடிக்கைகள் என்னென்ன?
 

கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 25ஆம்தேதி முதல் தற்போது வரை கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

 

covai


 

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்கு ஒருமாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 


 

 

gggg



எல்லா தரப்புக்கும் இந்த உதவிகள் போய் சேருகிறதா?
 

பகுதி வாரியாக ஆய்வு செய்து ஏழ்மை நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து ஜாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அவர்களின் கண்ணியம் கருதி இந்த நிகழ்வுகளில் நாங்கள் புகைப்படம் எடுப்பதில்லை. 
 

அதுபோல் உணவில்லாமல் தவிக்கும் சாலையோர மக்களுக்கு தினந்தோறும் உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவலர்களுக்கு தினம்தோறும் குளிர்பானங்கள் உணவுகள் மாலை தேனீர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. 

 

covai




இதுவரை என்னென்ன செய்திருக்கிறீர்கள். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
 

கோவை மாநகர பகுதிகள் அனைத்திலும் மற்றும் காய்கறி சந்தைகள்,காவல்நிலையங்கள், தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதிகள்,வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 
 

அதுபோல் கோவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உணவு, உள்ளிட்ட அடிப்படை உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
 

 

 

covai


இந்தப் பணிகள் அனைத்தும் மஜக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கட்சியின் தொண்டர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.தற்போது வரை சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இது போன்ற மனிதநேயப் பணிகள் தொடர்ந்து செய்யப்படும். 
 

http://onelink.to/nknapp

 

அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.உணவு இல்லாமல் அங்கு 10 பேர் இருக்கிறார்கள், இங்கு 5 பேர் இருக்கிறார்கள் எனப் போலீசார் சிலர் நம்மிம் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் உணவுகள், மளிகை பொருட்கள் கொடுத்து உதவி வருகிறோம்.


சென்னையில் பல்வேறு இடங்களில் உணவுக்காகத் தவித்திருக்கும் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கி வருகிறது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த். இதன் தமிழகச் செயலாளர் எஸ்.என். சிக்கந்தர் நம்மிடம்,


இரண்டு விதமான உதவிகளைச் செய்து வருகிறோம். பொதுமக்களுக்காக எங்களது இடத்தில் உணவு சமைத்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கொடுத்து வருகிறோம். இன்னொன்று ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்குகிறோம்.
 

chennai



அந்தப் பையில் என்னென்ன மளிகை பொருட்கள் இருக்கும்.எத்தனை நாளுக்கு உதவும்? 
 

முதலில் நாங்கள் ஒரு லிஸ்ட் எடுத்தோம்.எத்தனை குடும்பங்கள் மளிகை பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளது. ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றது போல் 3 வகையாகப் பிரித்தோம். இரண்டு கிலோ அரியோடு சக்கரை, பருப்பு, டீத்தூள், எண்ணெய், மசாலா பொருட்கள், ரவா, மைதா, கோதுமை உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான அடிப்படை பொருட்களோடு அந்தப் பையில் இருக்கும். கூடுதலாக நபர்கள் இருக்கும் குடும்பத்திற்கு 5 கிலோ அரிசியோடு அடங்கிய பை, 10 கிலோ அரிசியோடு அடங்கிய பை என மூன்று விதத்தில் கொடுக்கிறோம். சின்ன குடும்பம் ஒரு வாரம் பயன்படுத்தலாம், பெரிய குடும்பமாக இருந்தால் 5 நாட்கள் பயன்படுத்தலாம். 

chennai


 

உணவுப் பொட்டலங்களை எப்படித் தயார் செய்கிறீர்கள், எப்படி கொடுக்கிறீர்கள்?
 

எங்களது இடத்தில் நாங்கள் ஆட்களை வைத்து சமைக்கிறோம். இப்போது அதிக நபர்கள் கூடக் கூடாது. அதற்காக சமையல் செய்வதற்காக 4 பேரை மட்டும் வைத்துள்ளோம். அதனை நாங்கள் பொட்டலங்களில் மடித்து, பைக்கில் ஒருவர் மட்டும் சென்று கொடுத்து வருகிறோம். சில வீடுகளில் பெண்கள் தாங்களாக சமைத்து அவர்களே பொட்டலங்கள் போட்டு தருகிறார்கள். அதனையும் பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறோம். 

 

chennai


 

எந்த மாதிரியான மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்?
 

அன்றாடம் பாடுபடும் கூலித் தொழிலாளிகள், அண்டை மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தற்போது நிராகதியாக இருப்பவர்கள், வீடற்றவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கியிருக்கிறார்கள். வயிறு பசிக்கிறது. அதற்கு என்ன சார் தெரியும். சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொடுக்கிறோம்.
 

chennai



தினந்தோறும் உழைத்து அதில் வரும் வருமானத்தில் சாப்பிடுவார்கள். ஆட்டோ ஓட்டுநராக இருப்பார், நடைபாதை வியாபாரியாக இருப்பார், கடையில் வேலை செய்பவராக இருப்பார்கள், நல்ல குடும்பத்தைச் சேந்தவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், அவர்கள் வெளியே வந்து கேட்க மாட்டார்கள். அவர்கள் இந்த நேரத்தில் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்.அவர்களுக்கு ஒரு தயக்கம் வருகிறது.நாங்கள் கொடுக்கும் உதவிகளைப் பெற கூச்சப்படுகிறார்கள். பரவாயில்லை குடும்பத்தை நினையுங்கள், நாடு இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது எத்தனை நாளைக்கு கஷ்டப்பட முடியும் என்று நாங்களே கொடுத்துவிட்டு வருவோம். 
 

எத்தனை பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்?
 

ஒரு பைக்கில் ஒருவர் மட்டும் சென்று கொடுத்துவிட்டு வருவோம். ஆட்டோவில் இரண்டு பேர் செல்வார்கள். உதவி செய்ய நிறையப் பேர் வரத் தயாராக இருக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு சொல்வதையும் கேட்க வேண்டும் என்பதற்காக பைக் மற்றும் ஆட்டோவில் சென்று கொடுத்து வருகிறோம். சென்னையை நான்காகப் பிரித்து எங்களது கிளைகளில் இருந்து அந்தந்த பகுதி மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். காவல்துறையும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.
 

பெரியமேடு, கன்னியாபுரம், எண்ணூர், திருவெற்றியூர், தாளடிப்பேட்டை, ராயபுரம், சைதாப்பேட்டை, ஆலந்துர், முகப்பேறு, தாம்பரம், சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, மண்ணடி, மணலி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் உதவி செய்து வருகிறோம். இதுமட்டுமல்லாமல் இந்த இடத்தில் 10 பேர் தவிக்கிறார்கள் என்று செல்போனில் தகவல் வரும். அந்த இடத்திற்குச் சென்றும் இரண்டு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம். திருச்சி, மதுரை, குமரி, நாகர்கோவில், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுரை, கருர், திருச்சி, மணப்பாறை, துவரங்குறிச்சி என பெரும்பாலான பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் உதவி வருகிறோம்.