Skip to main content

இதனால்தான் முதல்வர் நேரக்கட்டுப்பாட்டை விதித்தார்!!! - அமைச்சர் உதயகுமார் நக்கீரனுக்கு பேட்டி

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
 

u



கரோனா தொற்று நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது?

இந்த கரோனா தொற்று என்பது இந்திய அளவில் என்பதை தாண்டி, உலக அளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இதற்காக பல்வேறு நிர்வாக குழுக்களை அமைத்து பணிகளை செய்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு கொண்டு அந்தெந்த மாவட்டங்களின் நிலைமைகளை உடனுக்குடன் அறிந்து வருகிறோம். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதில் தீவிரமாக இருக்கிறார். விரைவில் அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
 

nakkheeran app



வருவாய் துறை அமைச்சராக வணிகர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தாலும் அதனை வழிமுறைபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமக்களும் நாள் செல்ல செல்ல வெளியே வர முயற்சிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அப்படி அல்ல... இந்த ஊரடங்கு கொண்டு வரப்பட்டபோதே, பல்வேறு விதிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தியது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசாங்கம் விதிவிலங்கு கொடுத்தது. இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளித்தது. மேலும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைபோன்று அத்தியாவசிய உணவுப்பொருட்களான காய்கறிகள், பால், மளிகை முதலியவற்றுக்கு எல்லாம் நாம் முதலிலேயே விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தோம். மக்கள் வெளியே வந்தால் தொற்று பரவும் என்பதற்காகத்தான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தோம். உலக சுகாதார நிறுவனமும் இத்தகைய வழிமுறைகளை பின்பற்ற சொல்லியுள்ளது. அதே போல மத்திய குடும்ப நலத்துறையும் நமக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மருத்துவ நிபுணர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். இந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியதால்தான், மாண்புமிகு முதல்வர்கள் அவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை விதித்தார்.  அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மைதானங்கள், பெரிய பேருந்து நிலையங்களில் காய்கறி கடைகளை அமைக்க முதல்வர் உத்ததரவிட்டார். 
பாரதப் பிரதமர் அனைவரையும் 5ம் தேதி இரவு விளக்கேற்ற சொல்லியிருந்தார். அதனை எப்படி பார்க்கிறீர்கள், அதை சரி என்று நினைக்கிறீர்களா?

இந்தியா போன்ற உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற நாட்டில் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும்போது அது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்க வேண்டும். அநேக விஷயத்தில் பிரதமர் அருமையாக செயல்படுவார். விலக்கு ஏற்றுதல் என்பது தவறான காரியம் இல்லை. தமிழர்கள் தங்கள் வீடுகளில் காலங்காலமாக தொடர்ந்து விளக்கேற்றி வருகிறார்கள். எனவே விளக்கேற்றுவது என்பது சட்டவிரோதம் கிடையாது. எனவே பிரதமரின் அறிவிப்பில் எந்த தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.