younger brother chased his brother to incident near Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் கே.என். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(33) சரக்குந்து ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகள் உள்ள நிலையில் தனது சகோதரனான தேவேந்திரன்(30) என்பவரது மாமியாருடன் சிவகுமார் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் சிவகுமார் தனது உறவினர் வீட்டின் வெளியே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தகராறு எல்லையை மீறிய போது, பட்டப் பகலில் விளை நிலத்தில் ஓட ஓட விரட்டி சிவகுமாரை சரமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து அந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதனிடையே பொன்னேரி காவல் நிலையத்தில் இந்தக் கொலை குறித்து தேவேந்திரன் தானாக முன்வந்து சரணடைந்தார். மேலும்சகோதரர் சிவகுமார் தனது மாமியாருடன்திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும் இது குறித்துபலமுறை கண்டித்தும், கைவிடாததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் சிவகுமாரை கொலை செய்ததாகவும்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து தேவேந்திரனை கைது செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட சரக்குந்து ஓட்டுநர் சிவகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலை மறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.