Skip to main content

தூசுறிஞ்சியை கண்டுபிடித்தவர்...

Published on 04/07/2018 | Edited on 05/07/2018
vaccum cleaner

 

 

 

முதன்முதலில் மின்சாரத்தால் இயங்கும் வாக்வம் கிளீனர் எனும் தூசுறிஞ்சியை கண்டுபிடித்தவர் ஹியூபெர்ட் செசில் பூத். இன்று இவருடைய 147 ஆவது பிறந்தநாள். இவர்தான் தீம் பார்க்குகளில் முக்கிய இடம்பிடித்துள்ள ஜெயண்ட் வீலையும், தொங்கு பாலத்தையும் கண்டுபிடித்தார்.

 

sheshil booth


 

 

 

சிவில் என்ஜினியரான பூத் லண்டன், பிளாக்பூல், பாரீஸ், வியென்னா ஆகிய நகரங்களில் ஜெயண்ட் வீல்களை அமைத்துக் கொடுத்தார். இத்தகைய வீல்கள் அமைக்கப்பட்ட புதிதில் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

 

 

 

நதிகளுக்கு இடையிலும், மலைகளுக்கு இடையிலும் குறைவான மூலப்பொருட்களுடன் பாதுகாப்பான தொங்கு பாலங்களை முதன்முதலில் வடிவமைத்தவரும் இவர்தான். இவருடைய நினைவாக கூகுள் தனது டூடுலை வடிவமைத்திருக்கிறது.