கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்திசற்று அடங்கி உள்ள நிலையில், அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைக் காரணம்காட்டி உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனங்கள்தொடங்கிசிறு நிறுவனங்கள் வரைஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ட்விட்டர்போன்ற நிறுவனங்களும்இதில் அடங்கும். உலகம் முழுவதும்உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள்தொடர்ந்து தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களைபணிநீக்கம் செய்து வரும் நிலையில், இது குறித்துதகவல் தொழில்நுட்பம்மற்றும் சேவை நிறுவனங்கள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்அழகுநம்பி வெல்கின் அளித்த பேட்டியின் விபரம்பின்வருமாறு...
ஐடியில் நிரந்தரப் பணிநீக்கம் என்பது இந்தியாவில் செயல்படுத்த முடியாது. இந்திய சட்டத்தின்படி ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே செய்ய முடியும். அதேபோல், அந்நிறுவனம்அதேபணியை அடுத்த முறை தொடங்கும் போது தற்காலிகப் பணிநீக்கம் செய்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றேஇந்தியச் சட்டம் சொல்கிறது. ஆனால், இது போன்று எதுவும் நடைபெறுவது இல்லை. தற்போது ஐடியில் நடப்பது நிரந்தரப்பணிநீக்கம். இவ்வாறு நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முறையான அறிவிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்றவாறு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இவ்வாறு எவ்வித முறைகளும் பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் நடைபெற்று வருகிறது.
ட்விட்டர், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதில்இருந்து நமக்கு தெரியவருவது, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக்செயின் டெக்னாலஜி போன்றவற்றில்கொரோனாஊரடங்கு காலத்தில் புது மார்க்கெட் உத்தியைக் கையாண்டு முதலீடு செய்தனர். வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையால்அதிகப்படியானமக்கள் இதை நோக்கி வந்து விடுவார்கள் என்று தொழில் போட்டியில் முதலீடு செய்து தோல்வியைச் சந்தித்தனர். இந்தபோட்டியில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதைத்தான் இந்த கொரோனா காலகட்டம் உணர்த்தியது. முதலீடுகள்மூலம்ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக்செயின் டெக்னாலஜி போன்றவற்றில் மார்க்கெட்டை பிடிக்க முயன்றனர். ஆனால்,உண்மையில் யாரும் அந்த மார்க்கெட்டை பிடிக்கவில்லை.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சைசரியாகப் பயன்படுத்திக் கொண்டால்ஒரு வேலை உருமாறும். அதன் மூலம் வேலையில்தான் மாற்றங்கள் இருக்கும். வேலையிழப்பு என்பது இருக்காது. உலக வர்த்தக நிறுவனக் கூற்றுப்படி, பத்து ஆண்டுகளுக்கு முன்புஒரு நிறுவனம்ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்றால் 10 சதவீத தொழில்நுட்பமும்,90 சதவீத மனித சக்தியும் தேவைப்படும். ஆனால், தற்போது இந்த விகிதாச்சாரம் 50க்கு50 சதவீதமாக உள்ளது.தற்போதுகல்லூரி முடித்துவிட்டு வருபவர்களால் இந்த தொழில்நுட்பத்தைச் சமாளிக்க முடியும். ஆனால், ஏற்கனவே வேலை செய்பவர்களுக்குஇந்த முறைசிரமமாக இருக்கும்.
கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது சில காலத்திற்குப் பிறகேஉண்மையான நிலவரம் வெளியேதெரியவரும். இந்தியாவில் கூகுளை பொறுத்தவரை சட்டத்தின் அடிப்படையில் யாரையும் பணியில் இருந்து நீக்க மாட்டார்கள். தமிழகத்தை விட பொருளாதார மதிப்பு அதிகம் கொண்ட ஒரு நிறுவனம் அவ்வாறுநீக்க வேண்டும் என்றால் அவர்களின் முதலீட்டில்ஒரு பகுதியை ஊழியர்களுக்காக செலவிட வேண்டி இருக்கும். அதனால், கட்டாயப்படுத்திபதவியை ராஜினாமா செய்ய வைப்பார்கள். சட்டத்தின்படி தொழிலாளர்களே வேலையை விட்டு சென்றதாகக் கணக்கு கட்டப்படும். அந்த வகையில் தான் தற்போது கூகுளின் முதலீட்டைக் காப்பாற்ற ஒட்டுமொத்தமாக 12000 பேர் வேலையை விட்டுச் சென்றதாகக் காட்டப்படும். ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்யும்போதுதான் இதுகுறித்து வெளியுலகிற்குத் தெரியும்.
இந்தியாவின் உள்நாட்டுப்பொருளாதாரம் வளர்கிறது. ஆனால், வேலைவாய்ப்புகள்உருவாவதில்லை. வேலைவாய்ப்புகள்தேவைக்கு ஏற்ப வளரவில்லை. ஒரு டேட்டா சென்டர் 1000 கோடிக்கு முதலீடு செய்தால்100 பேருக்கு தான் வேலைவாய்ப்புகள்உருவாகிறது. ஆனால், முன்னர் எல்லாம் 100 கோடிக்கு முதலீடு செய்தால் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். பணிநீக்கத்தின் போது ஊழியர்களையும் அவர்களையும்சார்ந்து இருப்பவர்களுக்கும் எவ்வித அக்கறையும் காட்டப்படுவதில்லை. அதற்கானமுயற்சிகள்கூட தொழிற்சங்கம் மூலம்போராட்டம் செய்துதான் கிடைக்கிறது. நிறுவனங்கள் தானாகவே அதைஎல்லாம்செய்யவில்லை.
ஒரு நிறுவனத்தில் பணிநீக்கம் என்பது பதவியின் அடிப்படையில் குறிப்பிட்டுச் செய்யப்படுவதில்லை. அனைத்து நிலையில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுகிறார்கள்.எட்டில் இருந்து பத்து வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். முதலீட்டைக் காப்பாற்றிக் கொள்ளவும்லாபத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தான் இந்தப் பணிநீக்கம். இவற்றுக்கு மேலாக, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம்அதிகப்படியான லாபம் பார்க்க முற்பட்டுஅதில் தோல்வி அடைந்ததின்வெளிப்பாடாகத்தான்இந்தப் பணிநீக்கம் நடக்கிறது.ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் டேட்டா என்ட்ரி அப்பேராட்டர், காமன் சேவை சென்டர், பிபிஓ போன்ற வேலைகளில் இதனால் பாதிப்பு இருக்கலாம். ஆனால், ஐடியில்முழுவதுமாகஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எதிர்காலத்தில் சாத்தியம் இல்லை.
எந்த ஒரு நிறுவனமும் இந்திய அரசியலமைப்புக்குஉட்பட்டுத்தான் தனக்கான சட்டங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும். ஆனால், சேவை நிறுவனங்களுக்கான நிலையாணை இல்லாததால் நிறுவனங்களின்சட்டத்திற்கு உட்பட்டு இவ்வாறு சட்டவிரோதமாகப் பணிநீக்கம் நடைபெறுகிறது. இதனை முறைப்படுத்தவேண்டும். பணிநீக்கம் தொடர்பான விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒருபுறம் புதியவர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மறுபுறம் ஏற்கனவே வேலை செய்துகொண்டு இருப்பவர்களைபணியில் இருந்து தொடர்ந்து நீக்கம் செய்துகொண்டே இருப்பார்கள். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொருமுறையும் இதுகுறித்து தொழிலாளர் வாரியத்தில் முறையிட வேண்டியுள்ளது. அவர்களும் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தயங்கி வருகின்றனர்.