அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்பட்டதே முதல் நினைவு தினம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அது முதன்முதலில் அனுசரிக்கப்பட்ட நாள் எது என்பதில் இருந்த குழப்பத்திற்கு இப்போது முடிவு காணப்பட்டுள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தின் கொலம்பஸ் பல்கலைக்கழக ஆவணங்களில் இருந்து ஒரு படத்தை எடுத்து 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதிதான் முதல் நினைவுதினம் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.
1868 முதல் 1870 வரை மே மாதம் 30 ஆம் தேதி போர் வீரர்களின் கல்லறைகளுக்கு அமெரிக்க தேசிய கொடியை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும், 1871 முதல் மே மாதம் கடைசி திங்கள் என்று முடிவு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், 1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொலம்பஸ், மிசிசிபி மாகாணங்களில் முதல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று இப்போது கூறப்படுகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் என்பது பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்காக போராடிய அமெரிக்க மக்களின் போராட்டத்தை குறிப்பதாகும். இந்த போராட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவ தளபதி ராபர்ட் ஈ.லீ 1865 ஆம் ஆண்டு மக்கள் ராணுவத்திடம் சரணடைந்தார். ஆனாலும், 90 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஏப்ரல் 26 ஆம் தேதிதான் சரணடைந்தனர். அன்றைய தினமே முழுமையான வெற்றி என்று கருதப்படுகிறது.
இதை மையமாக வைத்து கொலம்பஸ், மிசிசிபி மாகாணங்களில் 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 2010 ஆம் ஆண்டு பராக் ஒபாமாவும் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல் நினைவு தினம் குறித்து வேறுபட்ட விவாதங்கள் தொடர்ந்தாலும், அமெரிக்காவில் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது 1868 ஆம் ஆண்டுதான் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்பகுதி மாநிலங்கள் இன்னமும் ஏப்ரல் 26 ஆம் தேதியை தங்களுடைய அஞ்சலி தினமாக கடைப்பிடிக்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்கா முழுமையாக தேசிய விடுமுறை தினத்திற்கு மரியாதை கொடுக்கத்தான் செய்கிறார்கள்.