Skip to main content

தந்தூரி சிக்கன் சாப்பிடுபவர்களே, உங்களுக்கு தந்தூரி டீ பற்றி தெரியுமா???

Published on 31/05/2018 | Edited on 24/06/2018

சாதா டீ, இஞ்சி டீ, மசாலா டீ, லெமன் டீ, பால் டீ, சைனா டீ இவ்வளவு ஏன் நமோ டீக்கூட தெரியும் அது என்ன தந்தூரி டீ ? என்று எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கிறது இந்த டீ. டீ இந்தியாவின் என்ரஜி ட்ரின்க் என்றே சொல்லலாம். இளைஞர் பலர் டீக்கு அடிமையாக இருப்பதை அறிவோம். தலைவலி என்றால் டீ, காலையில் புத்துணர்ச்சியாக டீ, மாலையில் சோம்பலை போக்க டீ, படிக்க டீ, தூக்கத்தை தவிர்க்க டீ  என்று இந்தியா முழுவதும் டீ குடிப்பதில் எந்த வேறுபாடும் இன்றி இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களிடம் புனேவை சேர்ந்த சாய் லா என்ற டீக்கடை தந்தூரி டி என்ற ஒன்றை புதிதாக அறிமுக செய்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேமஸ் ஆகிக்கொண்டிருக்கிறது.


 

thanthuri tea

 

 

 


அது என்ன தந்தூரி டீ, எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் தமிழகத்தில் கிராமத்தில் விறகு அடுப்பில் சமைப்பதை பார்த்தவர்களுக்கு இது ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும். இந்தக்கடையில், ஏற்கனேவே போடப்பட்ட டீயை தந்தூரி அடுப்பில் களிமண் பானையில் வைத்து நெருப்புகங்குகள் மூலம் சூடுபடுத்தி பொங்க வைக்கின்றனர். அதை உடனடியாக களிமண் பானையில், சூடுபடுத்திய சுவை குறையாமல் டீ வெறியர்களுக்கு பரிமாறுகின்றனர். டீ குடிக்க வந்தவர்கள் தற்போது அந்த கடையில் டென்ட் போட்டு தங்கிவிட்டதாகவே சொல்கின்றனர். அவ்வளவு டேஸ்ட்டாம். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் எதார்த்தமாக இந்த கடைக்கு வந்து தந்தூரி டீயை சுவைக்க, அவர் இதற்கு விசிறியாகி ட்வீட்டரில் பதிவிட்டார்.     


 

tea

 

 

 


சாய் லா என்ற இந்த டீக்கடையை நடத்துபவர்கள் பிரமோத் பங்கர் மற்றும் அமோல் ராஜ்தியோ என்ற அறிவியல் பட்டதாரிகள். கிராமத்தில் பாட்டி பாலை காய்ச்ச பயன்படுத்திய யுக்தியை பார்த்து அதை அப்படியே டீ வைக்க பயன்படுத்தியுள்ளனர். இந்த டீ இந்தக் கடையில் மட்டுமே கிடைப்பதால், உலகிலேயே முதன் முதலாக தந்தூரி டீ வழங்கியது இங்குதான் என்று பெருமை கொண்டாடுகிறார்கள். இந்த டீயை பன் அல்லது ரொட்டியுடன் தொட்டு சாப்பிட்டால், வேற லெவல் என்கின்றனர். டீயும் 20 ரூபாய்க்கு கிடைப்பதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. புனேவுக்கு போங்க தந்தூரி டீ குடிங்க ....    

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்