ஜெ. மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் உரசல்கள் எழுந்தபோதே தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் எக்ஸ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன் அதிலிருந்து விலகினார். தி.மு.க.வில் சேரப் போகிறார் என தகவல்கள் பறந்தன. தொகுதியின் எம்.எல்.ஏ.வான உமாமகேஸ்வரி டி.டி.வி. தரப்புடன் இணைய, இடைத்தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று இருபத்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளி தனது பலத்தைக் காட்டினார் மார்க்கண்டேயன்.
இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயம் போய், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இணைப்பிற்குப்பின் விளாத்திகுளம் திரும்பிய மார்க்கண்டேயனுக்கு அவரின் இலைத்தரப்பு ஆதரவாளர்களும், உ.பி.க்களும் திரளாக இணைந்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த மாஸ், ஏரியா ர.ர.க்களை மட்டுமல்லாமல் எம்.எல். ஏ.வான சின்னப்பனையும் சூடாக்கியது.
மார்க்கண்டேயன் தி.மு.க.வுக்கு மாறி விளாத்திகுளம் வந்த நாள் தொட்டு, தி.மு.க. வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினர் அடுத்து அதன் ஊராட்சிக் கி.க.செயலாளர்கள் கூட மார்க்கண்டேயனைக் கூட்டமாகச் சென்று சந்தித்து சால்வை அணுவித்து வரு வது எம்.எல்.ஏ. மட்டுமல்லாமல் இலைத்தரப் பினரையும் கலக்கத்தில் வைத்துவிட்டது. இந்த அரசியல் பகைமையே நகரில் ஆக.17-ல் நடந்த அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் எதிரொலித்திருக்கிறது. இடைப் பட்ட நேரத்தில் எம்.எல்.ஏ.சின்னப்பன், மார்க்கண்டேயனின் உதவியாளரான அன்பு என்பவரைத் தனது வசம் திருப்பியிருந்தார்.
அக்.17-ல் அ.தி.மு.க. கட்சி ஆண்டுவிழாவில் கொடியேற்றிவிட்டுப் பேசிய எம்.எல்.ஏ. சின்னப்பன், மார்க்கண்டேயனை ஒரு பிடி பிடித்திருக்கிறார். இந்நிலையில், தி.மு.க.விற்கு வந்தபிறகு விளாத்திகுளம் நகரின் பேருந்து நிலையத்தின் முன்பாக வடக்கு மா.செ. கீதாஜீவன் தலைமையில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கான அனுமதியைப் போலீசிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்தார் மார்க்கண்டேயன்.
அக்.21 அன்று கொடியேற்ற நிகழ்ச்சி மாலை 5 மணி என்றபோதிலும் காலையிலிருந்தே நகர தி.மு.க.வினர், மார்க்கண்டேயனின் ஆதரவு வட்டம் என ஏராளமாகத் திரண்டவர்கள் நகரைப் பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பரபரப்பு அ.தி.மு.க. தரப்பையும் உசுப்பேற்றியிருக்கிறது. அன்றைய தினம் நகரமெங்கிலுமுள்ள சாலைகளில் தி.மு.க.வின் கொடிகள் நடப்பட்டிருந்தன. அதேசமயம் அ.தி.மு.க. தரப்பிலும் கொடியேற்ற அனுமதி கோரப்பட பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ் தரப்பு அ.தி.மு.க.விற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
நாங்களும் தி.மு.க.வைப் போன்று சாலையில் கொடிகளை நடுவோம் என்று அ.தி.மு.க. தரப்பு முண்டிநிற்க, விவகாரம் வரலாம் என்று எண்ணிய காவல்துறை போலீசைக் குவித்துவைத்திருந்தது. அ.தி.முக.வினரிடம் நிலைமையைச் சொல்லி அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமான எம்.எல்.ஏ. சின்னப்பன் போலீ சாரோடு பேச்சு வார்த்தை நடத்தவே, வம்பு எதற்கு என்று போலீசும் சற்றுப் பின்வாங்க, அ.தி.மு.க.வினரும் போட்டியாக சாலையில் தங்களின் கொடிகளை நட்டிருக்கிறார்கள். இதனால் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் மதியம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் ஸ்பாட்டுக்கு வந்த ஏ.டி. எஸ்.பி., கோபி மற்றும் டி.எஸ்.பி. பெலிக்ஸ் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வடக்கு மா.செ. கீதாஜீவன் தலைமையில் மாலை 5 மணியளவில் மார்க்கண்டேயன் உள்ளிட்ட தி.மு.க.வினர் திரள, பேருந்து நிலையமருகே கொடியேற்றப்பட்டது. அதேநேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில், பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. கொடியேற்று வதற்காக வேம்பார் சாலையில் ர.ர.க்கள் திரளாகக் கூடி பேருந்து நிலையம் நோக்கி நடைபோட்டிருக்கிறன்றனர். விவகாரம் கைமீறிப்போனதால் போலீசார் தடியடி நடத்தி அ.தி.மு.க.வினரைக் கலைத்தனர். தடியடியால் ஆத்திரமான எம்.எல்.ஏ. சின்னப்பன் அதனைக் கண்டித்து போலீசாருடன் கடும் வாக்குவாதம் நடத் தியவர் அ.தி.மு.க.வினருடன் பஸ் நிலைய மருகே சாலைமறியலில் இறங்கினார்.
ஸ்பாட்டுக்கு வந்த டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநவின் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட சின்னப்பன், பஸ்நிலை யம் முன்பு போட்டியாக அ.தி.மு.க. கொடியை ஏற்றிவிட்டே கிளம்பிச்சென்றார்.
ஈகோ அரசியல் எங்கே கொண்டு நிறுத்தப்போகிறதோ...