தமிழகத்தில் ஃபுட் பேங்க் இந்தியா என்கிற அமைப்பை நடத்தி வருபவர் சினேகா மோகன்தாஸ். சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இஅய்ங்குபவர். இந்தாண்டு மகளிர் தினத்தன்று பிரதமர் மோடி, தனது ட்விட்டர் கணக்கை ஒரு நாள் மட்டும் நிர்வகிக்கும் பொறுப்புக்கு சினேகா மோகன் தாஸை தேர்வு செய்திருந்தார். அதன்படி சினேகாவிடம், மோடியின் ட்விட்டர் கணக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் தேசிய அளவில் பிரபலமானார் சினேகா மோகன்தாஸ் . அந்த சமயத்தில், அரசியலுக்கு பெண்கள் வர வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் கமல்ஹாசன். மேலும், சினேகா மோகன் தாஸிடமும் பேசினார் கமல். இந்த நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யத்தால் ஈர்க்கப்பட்ட சினேகா, நேற்று கமலின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதனை வரவேற்று வாழ்த்தியுள்ள கமல், சினேகா மோகன்தாஸை மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமித்திருக்கிறார் கமல். இது குறித்து தனது ட்விட்டரில் கூறியுள்ள சினேகா மோகன்தாஸ், ‘’என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் அணி துணைச் செயலாளராக நியமித்ததற்கும் நம்மவர் கமலுக்கு நன்றி‘’ என தெரிவித்திருக்கிறார்.