Skip to main content

திமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர் வழங்கப்படுமா?

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

கொள்கை சார்ந்த இயக்கமான திமுக, தனது கொள்கைளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க மிகப்பெரிய பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது.

 

arignar anna


 

திமுகவின் பேச்சாளர்கள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதை இருந்தது. தமிழகம், இந்தியா, உலகம் என்று அவர்கள் புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

 

திராவிடர் கழகத்தில் பெரியாரின் சீடர்களாய் கொள்கைகளை மேடைகளில் முழங்கிய அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலக அரசியலை தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். திமுக பொதுக்கூட்டங்களை மாலை நேரத்து பள்ளிக்கூடங்கள் என்று அண்ணாவும் கலைஞரும் கூறியிருக்கிறார்கள்.

 

தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் தங்களை பேச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக அண்ணா உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

திமுகவின் முன்னணி பேச்சாளர்கள் தங்களுடன் இளம் பேச்சாளர்களையும் வளர்த்து விட்டார்கள். திமுகவில் இலக்கிய அணி சார்பில் பேச்சாளர்களை கண்டுபிடித்து ஊக்குவித்தார்கள். தலைமைக்கழகம் சார்பில் பேச்சாளர் பயிற்சி பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படும்.

 

திமுகவின் உடன்பிறப்புகளுக்காக மட்டுமின்றி, கழகத்தின் பேச்சாளர்களுக்காகவும்தான் கலைஞர் முரசொலியில் கடிதங்களை எழுதினார். அவருடைய கடிதங்கள் எதைக் கோடுகாட்டுகிறதோ அதைக் குறித்தே பேச்சாளர்கள் தமிழகம் முழுவதம் பேசுவார்கள். தொலைக்காட்சி மீடியாவும், மொபைல் போன்களில் அன்றாட செய்திகளும் விமர்சனங்களும் வந்தபிறகு கூட்டம் கேட்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு தவறான பார்வை உருவாக்கப்படுகிறது.

 

இதையே காரணம்காட்டி திமுக சார்பில் அரசியல் பொதுக்கூட்டங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தலைமையின் கடமை. மீட்டிங் இருந்தால்தான் ஈட்டிங் என்று முன்னணி பேச்சாளர்கள் கூறுவது உண்டு.

 

பொதுக்கூட்டத்துக்கு அதிக செலவாகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அந்த அளவுக்கு கொண்டு சென்றது யார்? மாவட்டச் செயலாளர்கள்தான். எளிமையான மேடைகள் திமுகவின் அடையாளமாக இருந்தது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஆடம்பரச் செலவுகளை அதிகமாக வைக்கிறார்கள். வளைவுகள், பேனர்கள், மாலை மரியாதைகள் என்று செலவு அதிகமாவதால்தான் கூட்டங்களை அடிக்கடி நடத்த முடிவதில்லை என்கிறார்கள்.


 

kalaignar

 

மாவட்டங்களின் பல பகுதிகளிலும் அடிக்கடி கட்சிக் கூட்டங்களை நடத்துவதுதான் கட்சியின் இருப்பைத் தக்கவைக்கவும், கட்சிக்காரர்கள் அடிக்கடி சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். திமுகவின் வேறு எந்தத் தலைவர்களைக் காட்டிலும் அண்ணாவுக்கும், கலைஞருக்கும்தான் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் நெருக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் கலைஞர் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். அதற்கு அவரே காரணமும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு கூட்டத்திற்கு போகும்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்னும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் அந்த பகுதியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசுவாராம் கலைஞர். மேடைக்கு பின்னேயும், மேடையிலும் அவர்களுடன் கலைஞர் பகுதிப் பிரச்சனையை கேட்டுத் தெரிந்துகொண்டு தனது பேச்சில் அந்தப் பிரச்சனையை இணைப்பாராம். அதன்மூலம் அந்தப் பகுதி கட்சிக்காரர்களின் மனதுக்கு நெருக்கமாவார். இதுதான், அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சியினரின் ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது எனக் கூறப்படுவதுண்டு.

 

கலைஞரின் இந்தச் செல்வாக்கைக் கூட ஏற்க மறுத்து, ஏதோ எம்ஜியார் ஆதரவால்தான் கலைஞருக்கு கட்சியினரின் ஆதரவு கிடைத்ததாக திசைதிருப்பும் பேர்வழிகள் அப்போதும் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். எம்ஜியாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தக் காலத்திலும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

 

சரி அதுபோகட்டும், இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதான். திமுக தனது மாலை நேரத்து பள்ளிகளை புனரமைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்ற திமுக பேச்சாளர்களின் குமுறலை பதிவு செய்யத்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தனது சீர்திருத்த நடவடிக்கைகளில் இதையும் இணைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.