Skip to main content

நித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

நித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் மா நித்திய தத்வ பிரியானந்தா மரண பயம் கலந்த குரலில் வெளியிட்ட வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு தெரியாது? அந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக் கோம். அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு... எனக்கு அந்த அளவுக்கு பயமா இருக்கு...' என கதறிய மகளின் குரலை கேட்டு அப்பா ஜனார்த்தன சர்மா உடைந்து போனார்.

 

priya



அந்த வீடியோ நள்ளிரவு வெளியானது. அதில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்னைத் தூங்க விடவில்லை. இரவு முழுவதும் அழுதேன். உடனடியாக எனது மகள் கடத்தப்பட்ட குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மறுநாள் காலை சென்றேன். அந்த வீடியோவையும் அதில் எனது மகள் உயிர் பயத்துடன் கதறியதையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தேன். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி எனது மகளை தேடி வரும் குஜராத் மாநில போலீசாரிடம் சென்று வீடியோவை காண்பித்தேன். அவர்கள் அதிர்ந்து போனார்கள். மரண பயத்துடன் எனது மகள் பேசிய பேச்சுக்கு என்ன எதிர்வினை செய்ய முடியும் என ஆலோசித்தார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் "நித்தி ஆசிரமத்தில் நடப்பது என்ன' என்று 164 சட்ட பிரிவுப்படி வாக்குமூலம் வாங்கினார்கள். அதில் "நித்தியும் ரஞ்சிதாவும் இணைந்து காட்சி தந்த வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில் நடக்கின்றன. குருகுலப் பள்ளி என நித்தி நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு நித்தி மனநோய் முற்றிய ஒரு கிரிமினல் என ஆதாரத்துடன் விளக்கினேன். அவர் எந்த மோசமான நடவடிக்கையும் செய்வார்.

 

sharma



பல கொலைகளை செய்தவர் என்றேன். அடுத்த நாளே இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மையான வீடியோ. அதில் பேசிய என் மகளின் பேச்சு உண்மையானது. ஒரு தகப்பனான எனக்கு எனது மகளின் முக பாவங்கள் நன்றாக தெரியும். இந்த வீடியோ பற்றி நக்கீரனில் செய்தி வெளிவந்தவுடன் எனது மகள் பேசியதாக மற்றொரு வீடியோ அவளது முகநூல் பக்கத்தில் வெளியானது. அதில் "உயிருக்கு ஆபத்து' என அவள் பேசி வெளிவந்த வீடியோ முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய வீடியோ என சொன்னார்.
 

nithy



எனது மகள் உயிருக்கு ஆபத்தில்லை என சந்தோஷப்படுவதா? முன்பு பேசிய "உயிருக்கு ஆபத்து' என்கிற வீடியோவில் எந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசினார் என கண்டுபிடிப்பதா? என்று குழம்பிப் போனேன். உயிருக்கு ஆபத்து என சாதாரணமாக யாரும் பேச மாட்டார்கள். முன்பொரு சந்தர்ப்பத்தில் என் மகள் பேசினாள் என வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் பதினான்கு வயதிலிருந்து நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு முன்பு உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்குமானால் அதுவும் தவறு தானே என என் மனம் யோசித்தது.


நித்தி செய்த செக்ஸ் லீலைகள் எல்லாம் அவர் உபயோகித்த செல் போன்களில் இருக்கின்றன. அதை அழிப்பதற்கே நாலரைக் கோடி ரூபாய் நித்தி செலவு செய்திருக்கிறார். அவர் ஒரு மோசமான கிரிமினல். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். அவருக்கு எதிரான போராட்டத்தை எனது குழந்தைகளை காப்பாற்றத்தான் நான் தொடங்கினேன். இன்று அது நித்தியின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் போராட்டமாக மாறிவிட்டது. அதனால் அதற்குக் காரணமான என் குழந்தைகளை அழிக்க நித்தி முயல்வார். அப்படி ஒரு முயற்சி நடந்தபோது எனது மகள் "உயிருக்கு ஆபத்து' என பேசி வீடியோ வெளியிட்டார். அது வைரலானது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் அதை வெளியிட்டன.

அதை நான் எனது மகள் காணாமல் போன புகாரை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்ததால் எனது மகள்களை விட்டே மறுப்பு வெளியிட்டுள்ளார் நித்தி. நித்தி இதுபோல ஏகப்பட்ட கிரிமினல் வேலைகளை செய்பவர். உண்மையில் எனது மகள்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பெரிய ஆபத்து உள்ளது' என்கிறார் ஜனார்த்தன சர்மா.


"இந்த வீடியோவில் பேசியது நாங்கள் அல்ல' என நித்தியின் மறுப்பு வீடியோவில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சொல்லவில்லை. முன்பு நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது "அது நான் அல்ல' என்றார் நித்தி. அது அவரும் ரஞ்சிதாவும்தான் என போலீசார் நிரூபித்தனர். அதனால் இம்முறை "அந்த வீடியோவில் இடம்பெற்றது நான்தான்; அது முன்பொரு சந்தர்ப்பத்தில் பேசியது' என்கிறார்கள் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்.

"ஏன் இந்த அவசர மறுப்பு' என நித்தியின் பக்தர்களிடம் கேட்டோம். "ஜனவரி 16-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்திக்கு எதிராக ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கடத்திய வழக்கு வருகிறது. ஜனார்த்தன சர்மா தனது மகள் உயிர் பயத்துடன் பேசிய வீடியோவை சமர்ப்பித்துவிட்டார்.

அந்த வழக்கில் முதல் குற்றவாளியான நித்தியைப் பிடிக்க கோர்ட் வாரண்ட் பிறப்பித்தால் தற்பொழுது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ப்ளூ கார்னர் நோட்டீஸ், ரெட் கார்னர் நோட்டீஸாகிவிடும். அந்த பயம்தான் காரணம்'' என்கிறார்கள். தன்னை ஆக்டிவ் ஆக காட்டிக்கொள்ள நித்தி விநாயகர் சதுர்த்திக்கு பேசிய வீடியோவை "விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்' என நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்புகிறார் நித்தி'' என்கிறார்கள்.

கர்நாடக, குஜராத் என உயர்நீதிமன்றங்களுக்கு பயந்து தப்பு மேல் தப்பு செய்து கிரைம் ரேட்டைக் கூட்டுகிறார் நித்தி.

 

 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.