Skip to main content

'2016' தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

2016 tn assembly election admk and dmk candidates votes

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

தேர்தலில் பதிவான ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம். எப்படி என்று கேட்கிறீர்களா? கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியைச் சந்தித்தனர்.

 

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் குறித்து பார்ப்போம்!

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 

 

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். 

 

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.சீதாபதி 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும், பி.சீதாபதி 61,879 வாக்குகளும் பெற்றனர். 

 

செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு 304 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.முனுசாமி 63,142 வாக்குகளும், ஆர்.டி.அரசு 63,446 வாக்குகளும் பெற்றனர்.  

 

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சுப்ரமணியன் 64,086 வாக்குகளும், கடம்பூர் ராஜு 64,514 வாக்குகளும் பெற்றனர்.

 

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.சுப்ரமணியன் 81,495 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81,936 வாக்குகளும் பெற்றனர். 

 

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் 85,877 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகளும் பெற்றனர். 

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 64,578 வாக்குகளும், ஆர்.சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளும் பெற்றனர். 

 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455, வெற்றிவேல் 79,974 வாக்குகளும் பெற்றனர். 

 

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவி செழியன் 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யு.சேது 77,006 வாக்குகளும், கோவி செழியன் 75,538 வாக்குகளும் பெற்றனர்.

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 81,160 வாக்குகளும், ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 81,761 வாக்குகளும் பெற்றனர். 

 

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகுபதி 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.கே.வைரமுத்து 71,607 வாக்குகளும், எஸ்.ரகுபதி 72,373 வாக்குகளும் பெற்றனர்.

 

பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி 818 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ராஜேந்திரன் 73,600 வாக்குகளும், கே.எஸ்.மூர்த்தி 74,418 வாக்குகளும் பெற்றனர். 

 

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 69,265 வாக்குகளும், கோதண்டபாணி 70,215 வாக்குகளும் பெற்றனர்.

 

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.ராஜேந்திரன் 982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈ.சி.கோவிந்தராஜன் 79,668 வாக்குகளும், வி.ராஜேந்திரன் 80,650 வாக்குகளும் பெற்றனர். 

 

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கோவிந்தராசு 995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.அசோக்குமார் 72,913 வாக்குகளும், எம்.கோவிந்தராசு 73,908 வாக்குகளும் பெற்றனர். 

 

சார்ந்த செய்திகள்