Skip to main content

துப்புரவுத் தொழிலாளர்களைத் துரத்தும் மந்திரி!

Published on 29/03/2018 | Edited on 31/03/2018
குடி உயர கோன் உயரும்.… ஆனால் நாம் ஆளத் தேர்ந்தெடுக்கும் கோமான்கள் தாங்கள்மட்டும் உயர்ந்தால் போதுமென நினைக்கிறார்கள்போல. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த மாங்காடு சிறப்புநிலை பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கிய இடத்தில் அமைச்சரொருவர் வீடுகட்டவிடாமல் தடு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

வாக்குப் பதிவு மையத்தில் தகாத வார்த்தையில் திட்டிய அமைச்சர்..!  

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Minister Benjamin made struggle in election booth


தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு தமிழகம் முழுக்க காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை வாக்குப் பதிவு துவங்கிய சில நேரங்களிலேயே அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் திரை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேவேளையில் சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறுகளும் ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு துவங்கியது. 

 

இந்நிலையில் சென்னை மதுரவாயில் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பெஞ்சமின் மதுரவாயிலில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு காலை வந்தார். அப்போது, அங்கு இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் அமைச்சர் பெஞ்சமின் எதிர் தரப்பினரை தகாத வார்த்தையில் திட்டியும் சாதிய ரீதியான கடுஞ்சொற்களை கொண்டும் திட்டியுள்ளார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.