![yaanai movie Sandaaliye song out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/fZpHC1qhQefqKfWmYZagVEoFMIm6WaEPJvrW4uqvoHQ/1655473783/sites/default/files/inline-images/969_1.jpg)
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'என் சண்டாளியே..." பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கிராமத்து காதல் பாடலாக வெளியாகியுள்ள இப்பாடலை சினேகன் எழுத வேல்முருகன் மற்றும் ரோஷினி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் இன்று (17.6.2022) வெளியாகவிருந்த நிலையில் விக்ரம் படத்திற்காக யானை படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.