




சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக கன்னட நடிகை சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரித்து விமல் - ஆஷ்னா சவேரி இணைந்து நடித்துள்ள படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்கிய கன்னட படத்தில் சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்திய நன்றிக்காக சர்மிளா மாண்ரே இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல்ராஜா, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இதற்கு முன்பு 'இன்று முதல்', 'ஆயுதம்', மேலும் கன்னடத்தில் 'சஜினி' மற்றும் 'ஜோக்கர்' என்கிற ஹாலிவுட் படங்களை இயக்கிய இவர் இப்படம் குறித்து பேசும்போது.... "இது கிளாமர் மற்றும் ஹுயூமர் படமாக உருவாகி வருகிறது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் பத்து நாட்கள் நடைபெற்றது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள்.மேலும் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இது இருக்கும்" என்றார்.