Skip to main content

“தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான்” - பா.ரஞ்சித்

Published on 27/02/2025 | Edited on 27/02/2025
pa.ranjith speech in gv prakash kingston movie trailer launch

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். கடலை பின்னணியாகக் கொண்டு ஃபேண்டஸி அட்வென்சர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது பா.ரஞ்சித் பேசுகையில், “ஜி.வி.பிரகாஷ் இந்த படம் ஆரம்பச்சதுல இருந்தே பயங்கர நம்பிக்கையோடு படத்தை பற்றி பேசுவார். படத்துடைய விஷுவல்சையும் காட்டி இந்த படம் நிச்சயமா ஒர்க் ஆகும்னு சொல்வார். பட்ஜெட்டை மீறி செலவு பண்றோம் என்கிற பயம் கூட இல்லாம, ஃபர்ஸ்ட் டைம் டைரக்டருக்கு அவர் வாய்ப்பு கொடுத்தது முக்கியமான விஷயம். இன்றைய சூழலில் நம்பிக்கை என்பது ரொம்ப முக்கியம். 

இன்னைக்கு நம்மகிட்ட பெரிய பொருளாதாரம் இல்ல. வி.எஃப்.எக்ஸ்-ல சூப்பரா ஒரு படம் பண்ணுவது சவாலான விஷயம். அந்த சவாலை கம்மியான பட்ஜெட்டில் இந்த டீம் பண்ணியிருக்காங்க. நாங்க எந்த படம் பத்தி பேசினாலும் கிங்ஸ்டன பத்தி ஜி.வி. பேசிட்டே இருப்பார். ரொம்ப நாளா படத்தை விக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கார். நிச்சயம் மக்களுக்கு இந்தபடம் பிடிக்கும். ஏன்னா ட்ரெய்லர் அந்தளவு நல்லாருக்கு. தமிழ் சினிமாவுல படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ரொம்ப சவாலான நிலை தொடர்ந்து இருக்கு. இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். அதை அடைய போராடிக்கொண்டிருக்கும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். 

ஜி.வி. நம்மளை பேசவே விடமாட்டார். பாடலுக்கான சூழ்நிலையை சொன்னால் அவர் ஒரு இமேஜினேஷனுக்குள் போய்விடுவார். எனக்கு கதை அந்தளவிற்கு சொல்ல வராது. பாடலுக்கான சூழ்நிலையும் அப்படித்தான். ஆனால் நாம சொல்ல வர விஷயத்தை சரியாக புரிந்து கொள்கிற ஒரு நல்ல டெக்னீஷியன் அவர். அது போல எனக்கு சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்து ஜி.வி.தான். நான் அடுத்து இயக்கும் வேட்டுவம் படம் பற்றி அவரிடம் பேசிட்டு இருந்தேன். கதையே நான் சொல்லவேயில்லை. ஆனால் அதற்குள் அவர் மூணு டியூன் ரெடி பண்ற அளவிற்குப் போய்விட்டார்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “சின்ன படங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வராங்க. அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், டிராகன் படம். சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓ.டி.டி.யில் விற்பது வரை சவாலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான்” என்றார்.

சார்ந்த செய்திகள்