
சென்னை – ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கத்தில், ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ், தென்னிந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கைப் பற்றி விரிவாக பேசினார். “எல்லைகளை தாண்டி முன்னேறுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உரையில், தென்னிந்திய ஊடகத்துறை பிராந்திய அளவில் தொடங்கி, இன்று உலக அளவில் செல்வாக்கைப் பெற்றுள்ளதைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசனின் சினிமா சாதனைகளை சிறப்பித்த கெவின் வாஸ், ‘மூன்றாம் பிறை’ (இந்தியில் ‘சத்மா’), ‘அப்பூ ராஜா’ மற்றும் ‘சாச்சி 420’ போன்ற படங்கள் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தன. கமல்ஹாசன் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமா தரமான கதைகளின் மூலம் உலக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது என அவர் பாராட்டினார்.
இந்திய மீடியா துறை உலகளாவிய மேடையை அடைய தயாராக இருக்கிறது என்று கூறிய கெவின் வாஸ், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜாஜு தலைமையில் ‘வேவ்ஸ்’(WAVES) என்ற புதிய முயற்சியை அறிவித்தார். இது புதுமை மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் என அவர் கூறினார்.