Skip to main content

விஜய்சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் ஹ்ரித்திக் ரோஷன்... கவனம் ஈர்க்கும் வேதா ஃபர்ஸ்ட் லுக்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

vikram vedha hrithik roshan first look poster released

 

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர். 

 

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துவருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வேதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கவனம் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் துவங்கும் ஹிரித்திக் ரோஷனின் வார் - 2

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
hrithik roshan war 2 update

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் வார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. 

இப்படம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய ஹிரித்திக் ரோஷன், “வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது” என்று தெரிவித்தார்.  இப்படத்தின் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 ஆம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 

இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்த எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.