Skip to main content

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

vijay sethupathy, nithya menon movie '19(1)(a)' get direct release in hotstar ott

 

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'விக்ரம்' படம் மற்றும் கதாநாயகனாக நடித்த 'மாமனிதன்' படம் சமீபத்தில் வெளியானது. இதில் 'விக்ரம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் 'மாமனிதன்' படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

 

இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 19(1)(a) படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.      

 

 

சார்ந்த செய்திகள்