Skip to main content

விஜய் 69; படப்பிடிப்பு தளத்தில் இருந்து பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்

Published on 21/12/2024 | Edited on 24/01/2025
vijay 69 pooja hegde update

அ. வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 ஆம் ஆண்டு  அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை பூஜா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய்யின் கால்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், 2024ஆம் ஆண்டின் கடைசி நாள் படப்பிடிப்பு என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்