Skip to main content

'காபி வித் காதல்' படத்தின் வீடியோ பாடல் வெளியானது

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

The video song of 'Coffee With Love' is released!

 

திரைப்பட இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் நடிகைகள் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் இணைந்து  நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'காபி வித் காதல்'. 

 

மேலும், இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை நடிகை குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

 

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில், 'காபி வித் காதல்' படத்தின் 'தியாகி பாய்ஸ்' வீடியோ பாடல் தற்போது யூடியூப்-இல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஜீவா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது வாட்ஸ் ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை (04/11/2022) வெளியாகவுள்ளது. 

 

'காபி வித் காதல்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்