
'நிமிர்' படத்தின் மூலம் தன் நடிப்புக்கு பலதரப்பில் இருந்து பாராட்டை பெற்ற உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். 'தர்மதுரை' படத்தின் வெற்றிக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதுபோல் உதயநிதியும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சீனு ராமசாமிக்கு நன்றி. உண்மையான படத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.