!['Tamil peoples are my brothers' - Ram Charan expressed his love](http://image.nakkheeran.in/cdn/farfuture/osa6_Lmroq0mfQ8z5GGUnISM4cL2-c6eCarPVV42wQ4/1649935328/sites/default/files/inline-images/Untitled-3_11.jpg)
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். கடந்த மாதம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜமௌலி இயக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதை அடுத்து தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து 'ஆச்சார்யா' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டான இன்று திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராம் சரண் தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "உலகெங்கும் வாழும் எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது வருடம் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.