Skip to main content

காலரை தூக்கிவிடும் தமிழ் ரசிகர்கள்! புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப்-2, படங்களை ஓவர்டேக் செய்யும் விக்ரம்?

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Vikram

 

இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பாலிவுட் சினிமாவான இந்தி மொழிப்படங்கள் தான் முதலில் உலகெங்கும் பேசப்பட்டு வந்தது. அதை பான் இந்தியத் திரைப்படங்களாக வெளிவந்த புஷ்பா, ஆர் ஆர் ஆர், கேஜிஎப் – 2 ஆகிய படங்கள் உடைத்தெறிந்திருக்கிறது.

 

இந்த படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் வசூல் சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக 1000 கோடியைத் தாண்டிய திரைப்படங்களின் பட்டியலில் இணைந்திருக்கின்றன கேஜிஎப்-2, ஆர்.ஆர்.ஆர்.

 

தமிழில் வெளிவந்த பீஸ்ட், வலிமை ஆகியவை பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியத் திரைப்படங்களாக வெளியானாலும் வசூல் ரீதியாக பார்க்கும் போது அவை பான் இந்தியா படங்களாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று சொல்ல வேண்டும். தமிழகத்தில் இப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் இந்திய அளவில் பெரிய அளவிலான வசூல் சாதனையைத் தொடமுடியாமல் போனது என்கிற வருத்தம் தமிழ் ரசிகர்களிடத்தில் இருக்கிறது

 

Vijay sethupathy

 

தொடர்ச்சியாக தமிழ்த்திரைப்படங்களை விட மற்ற மொழித்திரைப்படங்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிற வருத்தத்தை படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாடல் வெளியீட்டு விழா மேடைகளில்  நேரடியாகவே பலமுறை தெரிவித்தனர்.

 

திறமைசாலியான தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து மற்ற மொழி பான் இந்திய படைப்பாளிகள் முன் காலரைத் தூக்கி கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருந்ததை சினிமாக்காரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவருமே அறிந்திருந்தனர்.

 

இப்படியான சூழலில் தான், நேற்று வெளியான கமல்ஹாசனின் விக்ரம் தமிழ் ரசிகர்களையும் காலரைத் தூக்க வைத்துள்ளது. முதல் காட்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களைத் தாண்டி பொதுவான ரசிகர்களாலும் படம் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் வந்தவண்ணம் உள்ளது இப்படத்திற்கு. கிட்டத்தட்ட சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்பதால் மற்ற மொழி பான் இந்தியப் படங்களை  ஓவர் டேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பொறுத்திருந்து பார்ப்போம்…

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“உடையாத உடல்; சரியாத மனம்” - கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 vairamuthu congratulates Kamal Haasan

 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லவர் நடிகர் கமல்ஹாசன். திரைத்துறையையும் தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி அரசியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவரது எக்ஸ் பக்கத்தில் "நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன். இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது. வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?  உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்