பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி. இவர் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்து வசித்து வருகிறார். இவர் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த வருடம் அவரை பிரேக் அப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த மாதம் எட்வர்ட் ஜேக்கப்ஸ், அவரது தோழி அனஸ்தேசியா எட்டியெனுடன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அலியா ஃபக்ரி, எட்வர்ட் ஜேக்கப்ஸ் வீட்டிற்கு சென்று வீட்டின் பார்க்கிங் பகுதியில் தீ வைத்துள்ளார். அது வீட்டினுள் பரவி உள்ளே இருந்த ஜேக்கப்ஸ் மற்றும் அவரது தோழி அனஸ்தேசியா இருவரும் தீ-யில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தீ வைத்த அலியா ஃபக்ரி தனது முன்னாள் காதலரான எட்வர்ட் ஜேக்கப்ஸுடன் மீண்டும் சேர முயற்சித்த போது அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் இந்த செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்த அலியா ஃபக்ரி மேல் கொலை வழக்குப் பதிவு செய்தனர் காவல் துறையினர். பின்பு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 9ஆம் தேதி நீதிமன்றத்தில் வருகிறது.