Skip to main content

அதிபயங்கர சண்டைகளுடன் நயன்தாரா நடிக்கும் படம்...

Published on 27/03/2018 | Edited on 28/03/2018
syeraa


தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சயீரா நரசிம்மரெட்டி'. சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குக்கிறார். ரூ.150 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கும்  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படப்பிடிப்பை பற்றி பேசுகையில்...."சுமார் 25 நாட்கள் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அதிபயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கினோம், அது சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை படமாக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பரில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கும். படத்தின் திரைக்கதையில் ஹீரோயிசம் மட்டும் இல்லாமல் சுதந்திர உணர்வுகளுடன் நாட்டுப்பற்று மிக்க படமாக இந்த படம் இருக்கும்" என்றார்.

syeraa

 

சார்ந்த செய்திகள்

Next Story

"சூர்யாவுக்கு சொன்ன கதையை விஜய்க்கும் சொன்னேன். ஆனால்..." - சசிகுமார் 

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

நடிகர், இயக்குனர் சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' படத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி அறிமுகமானவர். இன்று வரை 'சுப்ரமணியபுரம்' பேசப்படுகிறது, தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. சசிகுமார் நடிப்பில் நேற்று (29-06-2018) 'அசுரவதம்' திரைப்படம் வெளியாகியுள்ளது.

 

sasi vijay



தனது உறவினரும் தன் தயாரிப்பு நிறுவனமான 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் முக்கிய அங்கமுமாக இருந்தவருமான அஷோக்கின் தற்கொலைக்குப் பின் சசிகுமார் அதிகமாக செய்தியாளர்களிடம் பேசவில்லை. சமீபத்தில் சசிகுமார் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது, 'ஈசன்' திரைப்படம் வெளிவந்த பின், எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு சரித்திர கதையை உருவாக்கியதாகவும் அந்தக் கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பாரென்பதால் அவரை அணுகி அவருக்கும் கதை பிடித்திருந்ததாகவும் பின் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அது நடக்காமல் போனதாகத் தெரிவித்தார்.

 

 


பின்னர் அதே கதையை கேட்ட விஜய், தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி 'புலி' உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு வருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் தாமதப்பட சசிகுமாரும் நடிப்பில் பிஸியாகிவிட அந்த வரலாற்று கதை படமாகாமலேயே இன்னும் இருக்கிறதாம். ஆனால், இதுதான் சசிகுமாரின் கனவு திரைப்படமாம். இதை இயக்க சரியான தருணத்துக்காகக் காத்திருக்கிறார்.  

 

 

   

Next Story

புதிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி... ரசிகர்கள் மகிழ்ச்சி 

Published on 02/06/2018 | Edited on 04/06/2018
vijay sethupathi


சமூக வலைத்தளங்கள் ஆரம்பித்த புதிதில் சினிமா துறையினர் அதிலிருந்து விலகியே இருந்தனர். பின்னர் நாளடைவில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது புகைப்படங்களும், தன் படம் குறித்த அப்டேட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இருந்தும் சில பிரபலங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டாமலே உள்ளனர். அந்த வரிசையில் இருந்த நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இதே போல் தற்போது விஜய்சேதுபதியும் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி உள்ளார்.  பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி பின்தொடர்கிறார்கள். அதில் நடிகர், நடிகைகள் பெயரில் பல்வேறு போலி கருத்துக்களும் பதிவாகின்றன. இதனால் நடிகர்களுக்கு சிக்கல் ஏற்படுகின்ற காரணத்தால் தன் பெயரில் உள்ள போலிகளை அப்புறப்படுத்த விஜய்சேதுபதியே ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி உள்ளார். மேலும் அதில்... "Twitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி" என்று தன் முதல் பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்சேதுபதியின் இந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.