Skip to main content

மேடையிலேயே கண்ணீர் வடித்த சுனைனா

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

sunainaa criying in regina promotinal event

 

சதீஷ் தயாரிப்பில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாள பட இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ்.

 

ஜூன் 23 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாகவுள்ளது. அந்த வகையில் மலையாளத்திலும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கேரளா, கொச்சியில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது சுனைனா பேசுகையில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இது போன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" எனப் பேசிக்கொண்டிருக்கையில் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கிவிட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அவரே சமாதானமாகி பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசுகையில், "எனது குடும்பத்திடமிருந்தும் தமிழ் ரசிகர்களிடமிருந்தும் நிறைய அன்பு கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன். இப்படம் எனது சினிமா கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவமனையில் சுனைனா திடீர் அனுமதி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Sunaina suddenly admitted in  hospital

 

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனைனா, நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்த இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெளியானது. 

 

இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இதுபோன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசி மேடையிலே கண்ணீர் விட்டிருந்தார். இது பரவலாகப் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் ஒரு புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சுனைனா. விரைவில் வலிமையுடன் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்ற காரணத்தை அவர் பகிரவில்லை. அதையும் விரைவில் பகிரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுனைனாவின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

 

 

 

Next Story

வாழ்க்கை முறையை எளிமையாக்க வேண்டும் - சுனைனா வேண்டுகோள்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Sunaina Interview

 

ரெஜினா படத்தில் நடித்த நடிகை சுனைனாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

வெரைட்டியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வம்சம், நீர்ப்பறவை போன்ற கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்கும்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் என்னுடைய கேரக்டர்களுக்காக அவற்றை நான் கற்றுக்கொண்டேன். ரெஜினா கேரக்டரும் நன்றாக வருவதற்காக நான் என்னுடைய உழைப்பை வழங்கியிருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

 

பாண்டிராஜ் சாரின் படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். எப்படிப் பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்று நிறைய தெரிந்துகொண்டேன். அந்த ஷூட்டிங்கில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. சந்தோஷமாக நடித்தேன். சமுதாயத்திற்கு என்னால் செய்ய முடிந்த நல்ல விஷயங்களை நான் செய்துகொண்டிருக்கிறேன். விஜய் சார் செய்து வருவது நல்ல விஷயம். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் உதவி செய்வதைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்களும் அதுபோல் உதவிகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. மக்களுடைய வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரெஜினா ஒரு சிம்பிளான குடும்பப் பெண். அவளுடைய பயணம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும்.

 

லிவிங் டுகெதர் என்பது அவரவர் விருப்பம் தான். என்னுடைய திருமணம், எனக்கான நபரை நான் கண்டுபிடித்த பிறகு நடக்கும். யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. ஒரு த்ரில்லராக இருந்தாலும் ரெஜினா படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தப் படத்துக்கு கேரள ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு எமோஷனல் த்ரில்லராக, வித்தியாசமான ஒரு படமாக இது இருக்கும்.